பதிவுகள்தான் பிறவிக்குக் காரணம் என்றால் உலகில் முதல் மனிதன் செய்த குற்றம் என்ன?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பதிவுகள்தான் பிறவிக்குக் காரணம் என்றால் உலகில் முதல் மனிதன் செய்த குற்றம் என்ன?

Post by marmayogi » Wed Oct 05, 2016 7:32 am

கேள்வி: மகரிஷி அவர்களே! பதிவுகள்தான் பிறவிக்குக் காரணம் என்றால் உலகில் முதல் மனிதன் செய்த குற்றம் என்ன?

பதில்: முதல் மனிதன் உலகத்தில் எப்படித் தோன்றினான் என்று ஆராய்வோமானால் விலங்கினத்தினுடைய வித்துத் தொடரிலே தான் மனிதன் தோன்றியிருக்க முடியும். ஏனெனில் வித்து இல்லாமல் உருவம் தோன்றியிருக்க முடியாது.

அந்த முதல் மனிதன் ஐயறிவு விலங்கினத்திலிருந்து தான் வந்திருக்க முடியும். அதற்கு முன்பு ஐயறிவு, நான்கறிவு, மூன்றறிவு, இரண்டறிவு, என்று பின் நோக்கிப் பார்த்தோமானால், ஓரறிவுள்ள தாவரத்திலிருந்து தான் உயிர் என்பது உற்பத்தியாகியிருக்கிறது. இரண்டறிவில் இருந்து ஐந்தறிவு வரையுள்ள விலங்கினம் எவ்வாறு வாழ்கின்றன? ஒரு ஜீவனை மற்றோர் ஜீவன் பிடித்துக் கொன்று தின்று வாழ்வை நடத்துகின்றன. உயிர்க்கொலை, பொருள் பறித்தல், வாழும் சுதந்திரத்தை அழித்தல் ஆகிய மூன்று குற்றங்கள் பதிவாகின்றன.

இந்தப் பறித்துண்ணும் செயல்தான் உடல் செல்கள் மற்றும் கருமையத்தில் பதிவாகி இரண்டறிவு ஜீவனிலிருந்து, ஐயறிவு வரை வந்து பிறகு முதல் மனிதனாகி இன்று வரை மனிதனுடைய ஜீவகாந்த சக்தியால் அவ்வளவும் இருப்பாகவும் இருந்து வருகிறது. இந்தப் பதிவுகளே தேவைகளாலும் சூழ்நிலைகளாலும் மலர்ந்து செயலுக்கு வருகின்றன.

வாழ்க வளமுடன்!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”