முன் ஏழு பிறவி, பின் ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்ன?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

முன் ஏழு பிறவி, பின் ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்ன?

Post by marmayogi » Sun Sep 18, 2016 9:09 am

கேள்வி: மகரிஷி அவர்களே! முன் ஏழு பிறவி, பின் ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்ன?

பதில்: பிறவிகள் ஏழு மட்டும் என்பதல்ல. அவை பெருங்கடலாக நீளும். செயல் பதிவு அல்லது வினைப்பதிவு என்பது ஒருமுறை நம்மிடம் பதிந்துவிட்டதென்றால், அது மீண்டும் பிரதிபலிக்காமல் செயலிழக்கச் செய்ய ஏழு தலைமுறைகள் ஆகும்.

அதாவது, ஒரு தலைமுறை என்பது இருபது ஆண்டுகள் என்று வைத்துள்ளார்கள். ஒரு செயலில் பதிவுக்கு நூற்று நாற்பது ஆண்டுள்ளவரை திரும்பத் திரும்பப் பிரதிபலிக்கும் வேகம் உண்டு. அதன்பிறகு அது வான்காந்த ஆற்றலால் தானாகவே மறைந்து விடும்.

இதில் எந்தத் தலைமுறையில் அந்தப் பதிவிற்குப் பிரதிபலிக்கும் வாய்ப்பைக் கொடுத்தாலும், அந்தப் பதிவைப் புதுப்பித்துக் கொண்டதாகும். அங்கிருந்து அது மேலும் ஏழு தலைமுறைக்கு எழுச்சி வேகம் பெறும். அதனாலேயே ஒரு செயலின் பதிவுக்கு ஏழு தலைமுறைகளிலும் (GENERATIONS) விளைவு வரும் என்பதை ஏழு பிறவிகள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.
தனக்கு முன்பு தாய் தந்தை வழியாக ஏழு தலைமுறைகளில் பெற்ற பதிவை முன் ஏழு பிறவி என்றும், அப்பதிவுகள் புதுப்பிக்கப்பட்டாலோ அல்லது புதியன செய்தாலோ அவை மேலும் ஏழு தலைமுறைகள் தொடரும் என்பதைப் பின் ஏழு பிறவிகள் என்று கொள்ள வேண்டும்.

வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”