பிறந்தது எதற்காக? சிந்தனை சிதறலில் இறைவன்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிறந்தது எதற்காக? சிந்தனை சிதறலில் இறைவன்

Post by ஆதித்தன் » Tue Sep 13, 2016 1:27 pm

மனிதன் பிறப்பிற்கு காரணம் ஆசை, புதியவை மீதான ஆசை. ஒன்றிலிருந்து ஒன்றாய் உயர்ந்து படிப்படியாக புதிய ஆசையின் அடைவு மனிதன்.

வேண்டும் என்ற ஆசை எப்பொழுதும் நம்முள்ளே இயங்கிக் கொண்டே இருக்கும். உயிருள்ள அனைத்திடமும் அது இயங்கிக் கொண்டே இருக்கும்.

தானாகவும் இது இயங்கும் வல்லமை கொண்டது என்பதுதான் புரியாத புதிர்.

அந்த இயக்கம் நம்மிடமிருந்துதான் இயங்கியது என்பதனை புரிந்து கொள்ள உதவுவதுதான் தியானம்.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது உண்மை. அந்த காரணத்தினை மனதில் வைத்து ஆலோசனை செய்வதுதான் தியானம்.

காரணத்தினை ஆராயுங்கள், காரியத்தினை மனதிலேயே தியானத்தில் செய்யுங்கள், இதற்குப் பெயர்தான் விழிப்புக்கனவு.

விழிப்புக் கனவுக்கும் தூக்கக் கனவுக்கும் வித்தியாசம் கொஞ்சம் உண்டு,

காதலித்தால் காதலியோடு டூயட் பாடுவது தூக்கக் கனவு.

காதலியின் அம்மாவும் அப்பாவும் நம்மை ஏற்பார்களா? என்ற கேள்வியோடு காண்பது விழிப்புக்கனவு.

சுற்றம் இல்லாமல் சூழலை சமாளிப்பது எத்தனை கஷ்டம் என்பதனை ஆராய்ந்து அடுத்தடுத்து காரியத்திற்கான காரணங்களைத் தேடி விடை கண்டுகொண்டால் அது வெற்றிக்கனவு.

சூழலை எப்பொழுது நாம் வெல்கிறோமோ அப்பொழுதே நமது வெற்றி நம் அருகில் வர ஆரம்பிக்கிறது.

இந்த வெற்றி வேடிக்கையானது ஆனால் உண்மையானது.

புதியதாக பைக்கில் செல்லும் ஒருவர் கீழே விழுந்துவிட்டால் உடனே வேகம் வேகமாக எழுவார் என்று மேடைப் பேச்சில் சொன்னார், காரணம் விழுந்ததை மற்றவர் எவரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக உடனே எழுந்தாராம்.... தன் காலில் அடிபட்டு இரத்தம் வடிந்தும் வலி தோன்றவில்லை... சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, யாரும் நம்மைப் பார்க்கவில்லை என்றப் பின்னரே ஒர் திருப்தியும் தான் அவமானப்படவில்லை என்ற ஒர் வெற்றி (தோல்வி) உணர்வு வந்தப் பின்னரே அதிலிருந்து கடந்து, வலி என்ற ஒர் சப்ஜெக்ட்டுக்குள் சென்று காலை பார்க்கிறார்.

அவமானப்படக்கூடாது என்பதில் உள்ள உணர்வினை வெற்றி என்பதின் மீது நாம் இல்லாமல் செய்துவிட்டோம் என்பதுதான் இன்றைய வாழ்க்கையின் நடைமுறை.

ஒர் காரியத்தின் பின்னே எத்தனை காரணங்கள் இருக்கிறது, காரணத்திற்கு எத்தனை காரணிகள் தேவைப்படுகிறது என்பதனை எல்லாம் கடந்து காரணிகளின் காரணம் தேடுவதுதான் தியானம்.

காதலனும் காதலியும் சூழலில் இரு காரணிகள், இந்த இரண்டு காரணிகள் வர நான்கு காரணிகளாக அப்பா அம்மா இருக்கிறார்கள். அந்த சமூக அமைப்பில் பல காரணிகள்.

மனித பிறப்பின் நோக்கம் என்ன என்று தான் ஏன் பிறந்தேன் என்றுக் கேட்பதனைக் காட்டிலும், இந்தக் காரணிகள் ஏன் பிறந்தன? இவர்கள் ஏன் வாழ்கிறார்கள், இவர்களின் நோக்கம் என்ன என்று சூழலில் செயல்பட்டால் கவலை இல்லை. கவலை இல்லாதவர்கள் மகிழ்வானவர்களே!

இதனைத்தாண்டி தியானித்தல் பெயர் யோகம்.

உண்மையாக தான் என்ற தனக்காக மட்டுமே தியானித்தல் பெயர் யோகம்.

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே யோகத்தின் செயல்.

தனித்திருக்கும் பொழுது, தன் தாயின் ஆசை, தன் தகப்பன் ஆசை எல்லாவற்றையும் துறந்துவிடுகிறீர்கள்.. அவர்களை நீங்கள் ஒர் மரம் செடி கொடிகளைப் போல் ஒர் அஃறினையாகப் பார்க்க ஆரம்பிக்கும் பொழுதுதான் உண்மையான தனித்திருத்தல் சித்தமாகும்.

இப்பொழுது உங்களது கேள்விகளை அசைபோட ஆரம்பிக்கலாம். காரணத்தினை சிந்தித்தல் காரியத்தினை திட்டமிடுதல் என்று உள்ளே அசைப்போட்டு போகப்போக ஒர் எல்லையான முடிவு கிடைக்கும் அதுவே.. என்னால் தனித்து எதுவும் முடியாது.

உண்ண உணவு வேண்டும் என்றால், அதற்கு உணவு கொடுக்கும் காரணிகள் வேண்டும், தாகத்திற்கு நீர் வேண்டும், சுவாசிக்க காற்று வேண்டும்.

இவை எல்லாம் சும்மா கிடைத்துவிடுமா என்றால் இல்லை, அதற்கும் காரணிகள் தேவைப்படுகிறது.

அப்படியான காரணிகள் எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குகிறது என்பதனை தியானித்தல் மூலமே நாம் கண்டுவிட்டோம். காரணிகளோடு ஒத்து அதன் ஆசைப்படி வாழ்வதிலும் உள்ள நமது பிரச்சனையான மூல ஆசை இயக்கத்தினை கைவசம் கொள்ளவே யோகம்.

உச்சக்கட்ட யோகத்தில் பசித்திரு என்ற தேடலைத் தாண்டி, பட்டிணி என்ற ஆக்கத்தினையும் உள்ளே புகுத்துகிறோம்.

உடல் வேறு தன் உயிர் வேறு என்பதனை உண்மையாக செயல்படுத்த ஆரம்பிக்கிறோம்.

இயற்கையாக உடலுக்கு பசிக்கிறது.. அந்த பசிக்கு உணவினை கொடுக்க மறுத்து தான் என்ற ஆதிக்கத்தினை செலுத்த ஆரம்பிக்கிறோம்.

எது நம்மை அனிச்சையாக ஆட்டிப்படைக்கிறதோ அதன் பசியான சுவாசத்தினையும் துச்சமென மதித்து வாசியினை வெறுத்து ஓடுக்குகிறோம்.

ஐம்பூதங்களால் ஆன நமது உடல் நான் என்ற தன் மனதுக்குள் ஓடுங்கி அடங்கும் பொழுது, உயிர் கைவசமாகும்.

உயிர் கைவசம் ஆகும் பொழுதே நமது தீர்க்கமான ஆசையினை முடித்தே தீர்வேன் என்ற ஒர் உறுதி பிறக்கிறது. எதற்கும் அஞ்சா வல்லமை பிறக்கும்.

வல்லவர் காரணத்தின் காரியத்தினை தியானிக்கும் பொழுது, அறிவு வளர்ச்சியும் ஜோதியும் உண்டாகும்.

நாமே எல்லாம் என்ற விரிதல் பிறக்கும்.

எல்லாம் ஆனவர்க்கு ஆனந்தம் பேரானந்தம்.

அதில் சிரிப்பவரும் அவரே, துன்பப்படுவதும் அவரே, நடுவில் மத்திமம் அவரே.

தன் ஆசை .. தன் ஆனந்தம் என்பதனை நாடியே தியானத்திலும் யோகத்திலும் புகுந்தோம், எல்லாம் ஆனோம்.

தான் காதலித்தால் அவளும் தன்னை காதலிக்க வேண்டும் என்று தானே நினைத்தோம், அவளுக்கு என்று ஒர் தனி ஆசையும் உண்டு என்று நினைக்கவில்லையே!!!

எல்லாம் ஆனவர்.. எல்லாம் கொடுத்து எல்லாமுமாய் நம்முள்ளும் இருக்கிறார்.

நாம் என்னவாக நினைக்கிறமோ அதுவாகவே அவருமாய் இருக்கிறார்.

சிரித்தால் சிரிக்கிறார். துன்பப்பட்டால் துன்பப்படுகிறார். மத்திமம் ஆனால் மத்திமம் ஆகிறார்.

நீ காதலித்தால் அவரும் காதலிக்கிறார்.. அவள் உன்னை மறுதலித்தால் அங்கு அவரும் மறுதலிக்கிறார்.

இதற்காக நீ துன்பப்பட்டால் அவரும் துன்பப்படுகிறார், கோபப்பட்டால் கோபப்படுகிறார்.

ஏனென்றால், அவர் உள்ளத்தின் உள் ஆசையாய் ஐயக்கியமாகிவிட்டார், பிறப்பு ஜோதியாகிவிட்டார்.

இவன் இறைவன் இடையில் வந்தவன். அழிப்பதற்கும் அவன் விரும்பவில்லை, ஆக்குவதற்கும் அவன் விரும்பவில்லை.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

பிறப்பின் நோக்கம் இயங்கிக் கிடப்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

உயிரானது பிறந்தது என்பதிலோ, இறந்தது என்பதிலோ அர்த்தமில்லை.

உயிரானது சுழன்று கொண்டிருக்கிறது, காரண காரிய வினைகளைச் சுமந்து உடலோடு இயங்கிக் கொண்டிருக்கிறது.

எல்லாம் கொடுத்தவனே இராஜ யோகத்தினையும் கொடுத்திருக்கிறான்.

காரியத்தின் காரணம் அவனே! அவனை அறியும் சூத்திரத்தினை கொடுத்தவனும் அவனே!

அவனின்றி நானில்லை என்பதனை அறிய வேண்டும். நானறிந்தால் நானின்றி அவனில்லை என்பதனையும் அவன் அறிவான்.

பிறப்பின் நோக்கம் இயங்கிக் கிடப்பதனைத் தவிர வேறொன்றும் இல்லை.

உள் இயக்கம் தாண்டி உலக ஆசைகளை நோக்கமாக கொள்ளும் பொழுது, அதனையும் சுமந்து செல்லத்தான் வேண்டும்.

முடிந்ததை சுமந்து முக்தி கொள்ளுங்கள்.

ஜோதி கிட்டவும் ஒர் ஆயுள் உண்டு.

ஜோதிக்கும் ஒர் ஆயுள் உண்டு.

இல்லாமைக்கும் ஒர் ஆயுள் உண்டு.

இதன் சுழற்சிக்கும் ஆயுள் உண்டு.

பிறப்பின் நோக்கம் இயங்கிக் கிடப்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
Hariharadossk
Posts: 11
Joined: Fri Aug 12, 2016 6:18 am
Cash on hand: Locked

Re: பிறந்தது எதற்காக? சிந்தனை சிதறலில் இறைவன்

Post by Hariharadossk » Wed Sep 14, 2016 6:37 am

நன்றி
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: பிறந்தது எதற்காக? சிந்தனை சிதறலில் இறைவன்

Post by cm nair » Thu Sep 15, 2016 10:48 pm

:great: :edu: :amen: :aah: superb..nalla sindhanai selva sir
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”