காந்தக் களத்தில் எவ்வாறு பதிவுகள் ஏற்படுகின்றன?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

காந்தக் களத்தில் எவ்வாறு பதிவுகள் ஏற்படுகின்றன?

Post by marmayogi » Sat Sep 10, 2016 4:05 am

கேள்வி: ஐயா, காந்தக் களத்தில் எவ்வாறு பதிவுகள் ஏற்படுகின்றன?

பதில்: எந்தச் செயல் செய்தாலும் அது அலை வடிவத்தில் பதிவாகிறது. கையை இந்த நாற்காலியில் ஊன்றி வைத்தால் அங்கு அழுத்துகிறதல்லவா? அது தான் ஜீவனுடைய பதிவு.

நம் உடலில் உள்ள ஜீவகாந்த ஆற்றல் வெப்ப ஓட்டத்தில் சேரும் போது ஒளி உணர்வாக மாற்றம் பெறுகிறது. அதற்குரிய கருவியாகிய கண்கள் மூலம் வெளியில் ஒளி அலையாகச் சென்று கொண்டிருக்கிறது. நமக்கு முன்னால் ஒரு பசு நிற்கிறது என்று வைத்துக் கொள்வோம். 4 அடி நீளம் 2 அடி உயரமுள்ள பசு உருவத்தின் மீது நம் கண்களிலிருந்து வெளியேறும் ஒளி அலையானது மோதி, தடை ஏற்பட்டதால் அலையியக்கத் தத்துவத்தின்படி திரும்பவும் நமது கண்களுக்கு வந்து சேர்கிறது.

இறையாற்றலின் தன்னிருக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலால் சுருங்கி நமது கண் கருவிழிகளில் படும் போது அவ்வளவு பெரிய பசு கொசுவை விடச் சிறிதாக ஆனால் உருவத்தில் எந்தக் குறையும் இன்றி பதிவாகி பார்வை நரம்புகள் வழியே மூளைக்குச் சென்று இதற்கு மேல் சுருங்க முடியாது என்ற நிலையில் உடல் முழுவதும் பரவுகின்ற ஜீவகாந்தக் களத்தில் பதிவாகிறது. காந்தக் களம் உடல் முழுவது சுழன்று கொண்டு இருப்பதால் இப்பதிவுகள் உடல் முழுவதும் அமைகிறது.

வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
Hariharadossk
Posts: 11
Joined: Fri Aug 12, 2016 6:18 am
Cash on hand: Locked

Re: காந்தக் களத்தில் எவ்வாறு பதிவுகள் ஏற்படுகின்றன?

Post by Hariharadossk » Sat Sep 10, 2016 5:18 am

:aah:நன்று அருமை
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”