விநாயகர் என்றால் யார்...?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

விநாயகர் என்றால் யார்...?

Post by marmayogi » Mon Sep 05, 2016 7:40 pm

விநாயகர் என்றால் யார்...?

விநாயகர் = வி + நாயகர்
'வி' என்றால் சிறப்புத்தன்மை வாய்ந்தது என்று பொருள்
பஞ்ச பூதங்களில் முதல் பூதம் விண்......!!!
அதன் முதன்மையான விண்ணுக்கு
நாயகனாகனாய் இருப்பதை குறிப்பதே வினாயகர்
விநாயகருக்கு ஐந்து கைகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அந்த கைகள் தான் ஐந்து பூதங்கள். ஐந்து பூதங்களுக்கும் அதிபதி என்றும் கூறுகிறோம்.

இதில் விநாயக பெருமானின் முழு ஆளுமை சக்தி எங்கு இருக்கிறது...???
மனித உடலிலும் இருக்கிறது.

“ஓம் கணபதி,
ஓங்கார கணபதி,
சடு குடு கணபதி,
குண்டெலி கணபதி" என்ற ஒரு பாடலும் இருக்கிறது.

இதில் குண்டலினி கணபதி என்பது குண்டலினி சக்தியை தான் குறிக்கிறது.
ஐந்து பௌதீக பிரிவுகளும் ஒன்றுகூடும் இடம் இந்த குண்டலினி மையப் பகுதி.
உடல் என்ற இயக்கத்தில் ஒரு வெளிப்பாடு இருக்கும்.

நாயகன் என்றால், (உதாரணமாக) இங்கு பார்க்கக்கூடிய எழுத்துக்களை பார்க்கும் நபராக நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் அல்லவா.....
இங்கு தான ஒரு விசித்திரம் உண்டாகிறது. உண்மையில் நாம் பார்ப்பதில்லை.
பார்ப்பவனை பார்ப்பவன் தான் “நாயகன்” நாம் இருப்பதாக எது நம்ப வைக்கிறது...?

இந்த உடல், ஐந்து கோசங்கள், மற்றும் மூன்று அவஸ்த்தைகள் (மனம், சித்தம், புத்தி) வழியாக இந்த மூன்று அவஸ்த்தைகள் நடக்கிறது உடலுக்கு. இந்த தத்துவங்களை சேர்த்து ஒரு தொகுப்பாக வரும்போது “நான்” என்ற நிலையும் வந்துவிடுகிறது.

அது தன நம் உடலுக்குள் இறக்கும் நாயகனாக நாயணம் ஆடிக்கொண்டே இருக்க வைக்கிறது.
ஆத்மா, அநாத்மாவின் சேர்க்கையை தான் “ஜீவன்” என்று சொல்வார்கள். இந்த ஜீவன் தான் “விநாயகன்”

நம்முடைய உடலுக்குள் மூன்று தேகங்களும், (பெரு உடல், சூக்கும உடல், காரண உடல்)
ஐந்து கோசங்களும், அன்னமயம், மனோமயம், பிராணமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம்)
மூன்று அவஸ்த்தைகளும் (ஆணவம், கன்மம், மாயை) சேர்ந்து இயங்கும்போது “நான்” என்ற உணர்ச்சி இருந்து கொண்டே தான் இருக்கும்.

இந்த “நான்” என்ற உணர்ச்சி ஐந்து பூதங்களை அடிப்படையாக கொண்ட ஒருவருடைய சக்தி கீழ் நிலையில்தான் இருக்கும்வரை அந்த உணர்ச்சி எழுந்து கொண்டே தான் இருக்கும்.
இந்த சக்தியை நீர்மம் கூடி இருக்கும் இடத்தில் லயப்படுத்தினால் (புருவ மத்தி) அதன் தன்மை குறைந்துவிடும்.

இதைத் தான் திருவேணி சங்கமம் என்று யோக சாஸ்த்திரத்திலும், பரிபாஷையிலும் சொல்லி இருக்கிறார்கள்.
நீர்ம நிலை என்றால், இடகலை, பிங்கலை, சுழுமுனை கூடி நிற்கும் இடம் என்று தான் அர்த்தம்.

இந்த “நான்” என்ற எழுச்சியை அங்கு எடுத்து சென்று கரைப்பது தான் “விநாயக சதுர்த்தி” விநாயகனாய் இருப்பது யார்...???
மூன்று உடல்கள், மற்றும் ஐந்து கோசங்களும், மூன்று அவஸ்த்தைகள் ஒன்று சேர்ந்தது தான் பதினோரு தத்துவங்களுக்கு அதிபதி தான் விநாயகர்.

நமக்குள் வரக்கூடிய நான் என்ற உணர்ச்சி அங்கு ஒன்றுமில்லாமல் போகும்போது அங்கு வினை தீர்க்கப்படுவதாகவும், அங்கு நாயகனாய் செயல்படும் சக்தியை “விநாயகன்” என்றும் வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் தான் நம் முன்னோர்கள் ஏதோவொரு விஷயத்தை ஆழப்படுத்தி சொல்வதற்கு தான் உருவகப்படுத்தினார்கள்.
நமக்குள் என்றைக்கு அந்த “நான் அற்ற” நிலைக்கு செல்கிறோமோ, அப்போது நம்முடைய வினைகள் அற்றுப் போகும்.
இதுவே “விநாயகன் வினை அறுப்பான்” என்றாகியது.

இந்த நிலை வரும்வரை வினைகள் அறுபடாமல் மேலும் வினைகளை கூடிக்கொண்டே இருக்கும் நிலை தான் ஏற்படும்.
அதனால்தான் ஐந்து பூதங்களின் தொகுப்பான இந்த நானை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்ல வந்த தத்துவம் தான் “விநாயக தத்துவம்”
விநாயக உருவத்தை உருவாக்கியவர்கள் வாசி யோகத்தை கடைபிடித்தவர்கள்.

சில கும்பகங்கள் செய்யும்போது உடல் பூரிக்கும். இந்த பூரிப்பு நிகழும்போது இயல்பாக தொந்தி வந்துவிடும்.
இது உணவால் ஆன தொந்தி அல்ல. அடுத்து மூன்று பூணூல் (முப்புரிநூல் – இடகலை, பிங்கலை, சுழுமுனை) இந்த மூன்று நாடிகளையும் சமநிலை படுத்தும் அறிகுறியாகத் தான் பூணூல் போடப்பட்டது.

நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் சரியாகவே செய்தும் கூட அதன் நுட்பத்தை புரிந்து கொள்ளலாமல் இருப்பது மதம் என்னும் எல்லைக்குள் அதை உணராத மக்கள் இருப்பதால்தான்.

நாமாவது நமக்குள் நான் அற்று இருக்கக்கூடிய அந்த நானை அவனுக்கு அர்ப்பணம் செய்து ஒன்றுமற்ற தனமைக்குள் அடங்க விட்டால் விநாயகனே நாமாகி விடும் நிலை தானே ஏற்படும்.
இதை சொல்ல வந்தது தான் “விநாயக சதுர்த்தி” ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு அனுபவத்தின் போதும் இந்த ஜீவன் என்ற நாயகன் உருவாகிக் கொண்டே இருக்கிறான்.
அவனை பரவெளியில் லயிக்க செய்யும்போது அவன் தன்னை இழந்து விடுகிறான்.

இதைத்தான் “ஜீவ போத அவஸ்த்தை” தான் “ஜீவன்” என்றும், “விநாயகன்” என்றும் சொல்லப்படுகிறது.

வாழ்க வளமுடன்
:- அப்துல் மஜீத்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”