உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.

Post by marmayogi » Sun Aug 21, 2016 9:23 am

சைவம்? அசைவம்? என்ன வேறுபாடு:-
★★★★★★★★★★★★★★★★★

தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகள் சைவம். உதாரணம் யானை, ஆடு, மாடு, குரங்கு போன்றவை..
தண்ணீரை நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். உதாரணம் சிங்கம், புலி, நாய், பூனை போன்றவை...

தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு இயற்கையாகவே குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை. தண்ணீரை நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும். செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும்.
மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்? தண்ணீரை உறிந்து குடிப்பதால் நிச்சயம் சைவ வகை தான்.. நாம் கீரையும், பச்சை காய்கறிகளையும் மட்டுமே உண்டு நூறு ஆண்டுகள் வாழ முடியும். ஆனால் சிங்கத்திற்கோ புலிக்கோ இது சாத்தியமில்லை!

எங்கே தவறு நடந்தது? நாக்கு தான். வேட்டையாடி உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையைக் கடந்து, பயிர் செய்து உயிர் வாழுமளவிற்கு நாம் பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நாக்கு ருசி நமக்கு இன்னும் மாறவில்லை. மறையவில்லை!
இது உண்மைதானா என்று யோசித்திக் கொண்டே இருக்க, திருவள்ளுவர் எனக்கு விடை கொடுத்தார்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

பொருள்:
தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
யாருக்கும் எந்த பாவமும் பண்ணல, என்ன மட்டும் ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறாருன்னு இனி நான் யோசிக்கவே மாட்டேன்.. இதுவரை எத்தனை கிலோ சிக்கன்!! எத்தனை கிலோ மட்டன்!!! அம்மாடியோ......
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”