ஒரு தனிமத்திற்கும் மற்றொரு தனிமத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்க முடியுமா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஒரு தனிமத்திற்கும் மற்றொரு தனிமத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்க முடியுமா?

Post by marmayogi » Mon Aug 08, 2016 1:00 pm

கேள்வி:, ஒரு தனிமத்திற்கும் மற்றொரு தனிமத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்க முடியுமா?

பதில்: தனிமங்களின் சுழற்சி வேகத்திற்குத் தகுந்தவாறு அதிலிருந்து வெளியாகக் கூடிய காந்த சக்தியின் அழுத்தம் வேறுபடுகிறது. தனிமத்தில் உள்ள விண்துகள்களின் சுழற்சியால் வெளியேறும் அலைக்கு யோகான் (Yogon) என்று பெயர் வைத்துள்ளோம்.

இவ்வாறு வெளியேறும் யோகான், விண்துகள்களைச் சுற்றியுள்ள இறைவெளியின் சூழ்ந்தழுத்தால் விண்துகள்களின் மையம் (Centre) வரை சென்று அங்குள்ள சுத்தவெளியில் மோதித் திரும்புகின்றது என்று வைத்துக் கொள்வோம். இதனால் அந்த அளவுக்கு விண்துகள்களின் அழுத்தமே குறைகிறது. ஆனால் இதைச் சூழ்ந்தழுத்தும் இறைவெளியின் அழுத்தம் மாறுவதில்லை. எப்பொழுதும் ஒரே அளவாகத்தான் (Constant) இருக்கும்.

அதனால் தனிமத்தில் உண்டாகும் யோகானின் அழுத்தம் விண்துகள்களின் சுழற்சி வேகத்திற்குத் தகுந்தவாறு வேறுபடுகிறது. (The intensity of magnetism which is coming out of the energy particle varies, according to the spinning action of the particles) விண்துகள்களின் சுழற்சி வேகம் குறையக் குறைய யோகானின் அழுத்தம் (Magnetic Force) அதிகரிக்கிறது.


வாழ்க வளமுடன்!!


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”