ஓஜஸ் என்றால் என்ன? . வித்து ஆற்றலின் மகிமை.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஓஜஸ் என்றால் என்ன? . வித்து ஆற்றலின் மகிமை.

Post by marmayogi » Mon Jul 25, 2016 9:31 am

கேள்வி - ஓஜஸ் என்றால் என்ன ? அதன் தேவை என்ன ?

இராம் மனோகர் - அதிக ஆற்றலுள்ள மின்சக்தியாகிய நம் உயிர் சக்திதான் ஓஜஸ். பொதுவாக மின்சாரத்தை காற்றாலைகள் மூலமாகவும், உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும், சூரிய ஒளியிலிருந்தும், அணு சக்தியிலிருந்து, தண்ணீர் வேகமாகப் பாயும் பொழுது அந்த விசையிலிருந்தும் இன்னும் பலவேறு ஆற்றல்களின் மூலமாக வேறுபட்ட ஆற்றல் திறன் கொண்ட மின்சக்திகளை தயாரித்து ஒரே இடத்தில் சேமித்து வைத்துக் கொண்டு, அதில் இருந்து எடுத்து கொஞ்சம் கொஞ்சமாகப் பயன்படுத்திக் கொள்கிறோம். தயாரிக்கும் பொழுது அதன் ஆற்றல் திறன் குறைவாக இருந்தாலும் மொத்தமாகச் ஓரே இடத்தில் சேமிக்கும் பொழுது அதன் ஆற்றல் அதிகரித்து விடுகிறது. அது போலவே நம் உயிர் சக்தியாகிய மின்சக்தியை, இந்தப் பிரபஞ்ச சக்தியிலிருந்து நாம் பல வழிகளில் பெறுகிறோம். சக்கரங்களின் மூலமாக, உணவின் மூலமாக, சுவாசத்தின் மூலமாக, தண்ணீரின் மூலமாக இப்படிப் பல வழிகளில் பெறுகிறோம். இந்த உயிர் சக்தியானது நம் உடலில் மூளை பாகத்திலும், மூலாதாரத்திலும் சேமிக்கப்படுகிறது. அப்படி சேமிக்கப்பட்ட உயிர் சக்தியை நாம் புலன்களின் இயக்கத்தின் மூலமாகச் செலவு செய்கிறோம்.

சேமிப்பு அதிகமாக உள்ள மனிதன் உடல் மற்றும் மன ஆற்றல்கள் உடையவனாக, தேஜஸ் மிகுந்தவனாக விளங்குகிறான். மனிதனிலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது இந்த ஓஜஸ் எனும் உயிர் சக்தியே. ஓஜஸ் அதிகமுள்ளவன் தலைவனாக, வசீகரம் உடையவனாக விளங்குகிறான். நம் உடலில் அதிக உயிர் சக்தி காம சக்தி வெளிப்படுகின்ற விந்து, நாதத்தில்தான் இருக்கிறது. எனவே காமத்தால் விந்து, நாதத்தை இழந்து, உயிர் சக்தி வீணாகி, ஆற்றல்கள் சிதறிப் போகாமல் பாதுகாத்தால், அதிக ஓஜஸ் சக்தி உடையவர்களாக விளங்கலாம். நாம் உண்ணும் உணவு அன்னரசமாகி, இரத்தமாகி பிறகு மற்ற தாதுக்களாக மாறுகிறது. இதில் எண்பது துளி இரத்தம் ஒரு துளி விந்துவாக மாறுவதால், அதில் உயிர் சக்தி அளவுக்கு அதிகமாக உள்ளது. விந்து, நாதமே சிருஷ்டியின் ஆதாரமாக விளங்குவதால் அவற்றிற்கு அந்த அளவு சக்தி வழங்கப்பட்டுள்ளது. எனவே சிருஷ்டி என்கிற அற்ப உடல் சுகத்துக்காக அல்லாமல் குழந்தைப் பேறுக்காக மட்டும் அதைப் பயன்படுத்தி விரையத்தை தவிர்ப்பவர்கள் அதிக ஓஜஸ் சகதி உடையவர்களாகத் திகழ்வார்கள்.

இந்த விந்து, நாதமாகிய சுக்கில, சுரோணிதம் முறையே ஆண்களுக்கு விரைக் கொட்டைகளிலும், பெண்களுக்கு சினைச் சுரப்பிகளிலும் சேமித்து வைக்கப்படுகின்றன. நம் உடலில் உண்டாகும் வெப்பத்தினால் இந்த விந்து, நாதத்தில் உள்ள சக்தி ஓஜஸ் எனும் மின்சக்தியாக மாறி, நுண்ணிய நாளங்கள் வழியாக உடலெங்கும் பரவுகிறது. வீணை மீட்டுவதற்கு முன் தந்திகளை வலுப்படுத்துவதற்கு ரோசனம் தடவுவது போல, பாவில் உள்ள நூலிழைகள் பலம் பெறுவதற்கு பசை தடவுவது போல இந்த ஓஜஸ் பரவுவதனாலேயே நம் நாடி, நரம்புகள் அனைத்தும் வலுப் பொறுகின்றன. மனதை ஒரு நிலைப்படுத்தி, புலன்கள்க் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த ஓஜஸானது இன்னும் வலிமையான ஆற்றலாக அதாவது தேஜஸாக மாறி மூளையைப் பலப்படுத்துகிறது. இதனால் மேதா விலாசம் உண்டாகும், உடல் ஒளி வீசும்.

சுக்கில சுரோணிதம் சேரும் பொழுதுதான் ஒரு புதிய ஜனனம் உருவாகிறது. அவை இரண்டையும் சேராமல் இருக்கும் பொழுது அறிவாற்றலும், அருளாற்றலும் வளரப் பெறுகிறது. ஒரு நெல்லை மண்ணில் போட்டால் பல நெல்லாக விளைகிறது. அதே நெல்லை சமைத்து உண்டால், அது உடலையும், உயிரையும் வளர்த்து வீரியத்தைத் தருகிறது. அதே போல்தான் சுக்கிலத்தை சுரோணிதத்தில் இணைத்தால் புதிய உடல்கள் தோன்றுகின்றன. அதே சுக்கில சுரோணிதத்தை இணைக்காமல் ஓஜஸாகவும், தேஜஸாகவும் மாற்றும் பொழுது மனிதன் தெய்வ நிலைக்கு உயர்கிறான். இதை உணராதவர்கள்தான் உடலுறவின் மூலமாகவும், சுய இன்பம் மூலமாகவும் அவற்றை விரையம் செய்கின்றனர். விவசாயி வயலில் விளையும் நெல் முழுவதையும் விதைப்பதற்கு பயன்படுத்துகிறாரா ? இல்லையே ? குறைந்த அளவே விதை நெல்லாக எடுத்து வைக்கிறார். பெரும் பகுதியை உணவிற்காகவே பயன்படுத்துகிறார். அது போலவே விந்து, நாதத்தின் சிறப்பறிந்து, இடமறிந்து, காலமறிந்து, தேவையறிந்து, இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

எஞ்சிய பெரும் பகுதியை உள் ஒளியைப் பெருக்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
மனிதனின் புலனின்ப நாட்டத்தால் விந்து கீழ் நோக்கிப் பாய்கின்றது. உயர்ந்த எண்ணங்களாலும், தவத்தினாலும், பக்தியினாலும், நோன்பினாலும், யோகத்தாலும், ஞானத்தாலும் விந்து மேல் நோக்கிப் பாய்கின்றது. நம் மூலாதாரத்தில் உண்டாகும் ஆன்மீக வெப்பத்தினால் விந்துவிலுள்ள ஓஜஸ் சக்தியானது பல்வேறு சக்திகளாக மாறி உடலுக்கும், உயிருக்கும், மனதிற்கும் ஆற்றலைத் கொடுக்கிறது. மனிதன் தன் பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கு ஓஜஸ் சக்தியை மேம்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இளம் வயதிலேயே கட்டுப்பாடாக இருந்து அதை மேம்படுத்திக் கொள்ளாதவர்கள், ஐம்பது வயதைக் கடந்த பிறகு அதை மேம்படுத்திக் கொள்ள நினைத்தால்,..... அது முடியாது.

;- இராம்மனோகர். (Sky yoga)
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”