கேள்வி: ஆண் பெண் இருபாலரிடமும் ஜீவ வித்துக் குழம்பு உள்ளதா?
பதில்: உள்ளது. ஆணிடம் மட்டும் தான் அது உள்ளது எனப் பலர் நினைக்கிறார்கள். ஆணிடம் அது வெளிப்படும் நிலை தெளிவாக உள்ளது தான் அவர்கள் அப்படி நினைப்பதற்குக் காரணம். அதனை விந்து என்கிறோம். பெண்ணிடம் ஜீவ வித்துக் குழம்பு உள்ளது. அதை நாதம் என்கிறோம். பெண்களிடத்திலிருந்தும் அது வெளிப்படக்கூடியது தான். ஆனால் அவர்களிடத்தில் அது மெதுவாக வெளிப்பட்டு வரும். சிறிது சிறிதாக வரும். விந்து போல் கெட்டியாகவோ, அதிகமாகவோ இராது. ஆண், பெண் இருபாலரிடமும் ஜீவ வித்துக் குழம்பு உண்டு. வெளிப்படுவதும் உண்டு. அப்போது ஏற்படும் உணர்ச்சியை ஆங்கிலத்தில் Orgasm என்று கூறுகிறோம்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
ஆண் பெண் இருபாலரிடமும் ஜீவ வித்துக் குழம்பு உள்ளதா?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked