ஜீவகாந்த சக்தி என்றால் என்ன?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஜீவகாந்த சக்தி என்றால் என்ன?

Post by marmayogi » Wed Jul 20, 2016 10:09 am

ஜீவ காந்த சக்தி :

"இந்த உடலிலே திடப் பொருள், நீர்ப் பொருள், வெப்பம், காற்று, உயிர் என்று இவற்றை எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால் அந்த உயிரானது மிக மிக நுண்ணிய பரமாணுக்கள். கோடி கோடி பரமாணுக்கள் அந்த விண் துகள்கள் கூட்டாக இயங்கிக் கொண்டிருப்பது தான் உயிர். ஒவ்வொரு உயிர்த் துகளிலேயும் தன்னுடைய சுழற்சியினால் வரக்கூடிய விரிவு அலை ஒரு அழுத்தம் பெறுகிறது. ஏனென்றால் வெளியிலே இருக்கக் கூடிய உயிருக்கும் உள்ளே உள்ள உயிருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இது உடலிலே சுழன்று சுழன்று ஏழு தாதுக்களுக்குச் சத்துப் பொருளாக (Essence) வரக் கூடிய Ectoplasm அல்லது ஓஜஸ் என்று சொல்லக் கூடியதாகவும் இருக்கக் கூடிய ஒரு வியத்தகு ஆற்றல் பெற்றது தான் இங்கே உள்ள உயிர். அதில் ஒரு பூச்சு வேலை நடந்த பிறகு (Treatment) பதிவு செய்வது, பிரதிபலிப்பது என்பதால் அதிகமான இயக்க வேகம் பெறுகிறது. நாம் பேசுவது ஒரு Tape ல் பதிந்து கொண்டே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எடுத்துப் பார்த்தால் வெறும் பிளாஸ்டிக் தான். ஓட்டுவதற்காக Cello tape வைத்திருக்கிறோமே அதை Tape-Recorder ல் போட்டு ஓட்டினால் பேச்சைப் பதிவு செய்து விட முடியுமா? முடியாது. ஏனென்றால் Tape க்கு முதலில் ஒரு காந்தப் பூச்சு (Magnetic treatment) கொடுக்க வேண்டும். பிறகுதான் அது பதிவை ஏற்கும். ஏற்ற பின் பிரதிபலிக்கும்.

அது போல பதிதல், பிரதிபலித்தல் (Functions) என்று மன இயக்கத்திற்கு உரிய செயலாக எண்ணும் போது அந்த உயிர் சக்தி சுழலும் போது தானாகவே அந்த அலை வெளிவந்து கொண்டே இருக்கும். அப்படி உடல் முழுவதிலும் இருக்கக் கூடிய உயிர் சக்தி சுழன்று வெளியிடக் கூடிய அலையினுடைய அழுத்தம் உடலிலே ஜீவ காந்த சக்தி என்று சொல்லுகிறோம். அந்த அலை அழுத்தம்தான் ஜீவ காந்த சக்தி. உயிருக்கும் ஜீவ காந்த சக்திக்கும் வித்தியாசம் உண்டு. உயிர் என்பது ஒரு இயக்க நிலையம், இயங்கிக் கொண்டே இருப்பது அதிலே இருந்து வெளிவந்து விரிந்து கொண்டே இருப்பது விரிவு அலை - அது தான் ஜீவகாந்த சக்தி."

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”