மனிதனுக்கு உணவு ஏன் தேவை?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மனிதனுக்கு உணவு ஏன் தேவை?

Post by marmayogi » Thu Jun 30, 2016 11:52 am

கேள்வி: மனிதனுக்கு உணவு ஏன் தேவை?

பதில்: மனிதன் இப்பூவுலகின்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்பூவுலகம் 25000 மைல் சுற்றளவு உடையது. தன்னைத் தானே மணிக்கு 1042 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. எந்த ஒரு பொருளும் வேகமாகச் சுற்றும் பொழுது இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் (Self Comprehensive Surrounding Pressure Force) காரணமாக ஒரு மைய ஈர்ப்பு விசை அமைந்து விடுகிறது.
உலகம் சுழலுகின்ற வேகத்தில் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் சக்தி (Gravitational Repulsive Force) அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது.

உடலானது கோடானுகோடி செல்களால் கட்டப்பட்டுள்ளது. பலகோடி பிறவிகளில் வந்த பரிணாம வேகத்தில் உடலில் உள்ள விண் என்ற லேசான நுண்ணியக்கத் துகள்கள் மேல் நோக்கு வேகத்தைப் பெற்றுள்ளன, பூமியின் மையத்தை விட்டு விலகும் ஆற்றலால் பூமியின் மேல் வாழுகின்ற மனித உடலில் உள்ள நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டுத் தொடர்ந்து (Thrown up) விசிறியடிக்கப்படுகின்றன. அதனால் உடலில் நுண்ணியக்க ஆற்றலில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் வேகம் குறைந்த முதிர்வுற்ற (Worn out Cells) துகள்கள் பூமியை நோக்கி உதிர்ந்து விடுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனித உடலில் உள்ள தசை, நரம்பு, எலும்பு, மூளைகளிலிருந்தும் கோடிக்கணக்கான செல்களை உடல் இழந்து கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும், காற்றுலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் உடலைப் புதுபித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் உடலின் இழப்பானது சரிக்கட்டப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்ளலாம். நாம் உடலைச் சரியாக எடை போட்டுக் கொள்வோம். ஒரு முழுநாள் நீரைத்தவிர எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்போம். அடுத்தநாள் காலை உடலை எடை போட்டுப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 கிராமிலிருந்து அதிக பட்சம் 200 கிராம் வரை உடலின் எடை குறைந்திருக்கும். இதிலிருந்து உடல் தான் இழந்த அணுக்களை உணவால் புதுப்பித்துக் கொள்வதை அறியலாம்.
இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கு சேர்க்கைக்கும் இடையில் நாள் தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டேயிருக்கிறான். இதனால் தான் வாழ்க்கைக்கு “பிழைப்பு” என்றே பெயர் வந்தது
வாழ்க வளமுடன்!!

:-அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”