முக்தி என்றால் என்ன? குழந்தை இல்லாதவர்களுக்கு முக்தி விரைவில் கிடைக்கும் என்கிறார்களே, உண்மையா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

முக்தி என்றால் என்ன? குழந்தை இல்லாதவர்களுக்கு முக்தி விரைவில் கிடைக்கும் என்கிறார்களே, உண்மையா?

Post by marmayogi » Mon Jun 27, 2016 9:11 am

கேள்வி: முக்தி என்றால் என்ன? குழந்தை இல்லாதவர்களுக்கு முக்தி விரைவில் கிடைக்கும் என்கிறார்களே, உண்மையா?

பதில்: முக்தி என்றால் இறை நிலைக்கும் மனநிலைக்கும் உள்ள தொடர்பு உணர்ந்து கொண்டு வாழும் அறிவின் முழுமை நிலையாகும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவுண்டு. ஏற்கனவே செய்யப்பட்ட முன் வினைகள் வித்துவின் மூலமாக வந்து உடலில் நோயாகவும், உள்ளத்தில் களங்கமாகவும், மனதில் குழப்பமாகவும், வாழ்விலே சிக்கலாகவும் மலர்ந்து கொண்டுள்ளது. நற்செயல்களையே செய்து இதை மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய பயிற்சியும் அறிவின் விளக்கமும் வழி வகுக்கும்.
மனம் ஒடுங்கி இறைநிலை நின்று, அகம் தூய்மையான நிலையில் செயல்களைச் செய்வதற்கு மனதிற்கு வேறு இடையூறுகள் இருக்கக்கூடாது. ஒருவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அக்குழந்தையின் வளர்ப்பிற்கு எத்தனை விதமான தேவைகள் இருக்கின்றது. உடல், பொருள், ஆவி அத்தனையும் தியாகம் செய்து அல்லவா அதை வளர்க்க வேண்டும். அடிக்கடி அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதில் மனம் ஈடுபடுவதால் இறைநிலைச் சிந்தனையில் மனம் தடைபடுகிறது.

ஆனால் தனியாக இருக்கக் கூடியவர்களுக்கும், குடும்பத்தில் இல்லாதவர்களுக்கும் நேரம் இருக்கிறது. ஆனால் மனம் அமைதியாக இருக்கவேண்டுமே? அவர்களும் அவசியமற்ற தேவைகளைக் கற்பனை செய்து கொண்டு இருந்தால் அந்தத் தேவைகளை முடிக்கின்ற வரைக்கும் மனதிற்கு அமைதி கிட்டாது.
இறைநிலை நோக்கிய சிந்தனைக்கு நேரம் ஒதுக்கிக் கொண்டு பயிற்சி செய்வதும், தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுவதைப் பொருத்தே அறிவின் முழுமை கிட்டும்.
இந்த வினாவில் இரண்டு பதில்கள் உள்ளன. ஒன்று! வினைப்பதிவுகள் இல்லை. கருமையம் தூய்மையடைந்து விட்டது. அதனால் பிறவித் தொடர் இல்லை. குழந்தை இல்லை. இரண்டாவது! குழந்தை உடையவர்கள் அதன் வளர்ச்சி, வளம், இவற்றிற்காக பல ஆசைகளை கற்பனையாக கூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் இறை நிலையறியும் நாட்டத்திலும், பயிற்சியிலும் மனம் செலுத்த முடியவில்லை. தாமதமும் ஏற்படுகின்றன. குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த இரண்டு வகையில் மனதுக்கு தடையற்ற முழு சுதந்திரம் கிடைக்கிறது.


:- வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”