வியத்தகு எண் பூஜ்யம்" (zero) (பூஜ்யமும் - பூஜ்யரும்) :

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

வியத்தகு எண் பூஜ்யம்" (zero) (பூஜ்யமும் - பூஜ்யரும்) :

Post by marmayogi » Sat Jun 25, 2016 9:02 am

வியத்தகு எண் பூஜ்யம்" (zero)
(பூஜ்யமும் - பூஜ்யரும்) :


"பூஜ்யம் தான் முழுமையான எண், மற்ற எண்களுக்கு மதிப்பு வைத்திருக்கிறோம். பூஜ்யத்திற்கு மதிப்பு ஒன்றுமில்லை என நினைக்கிறோம். ஆனால், அதுவா ஒன்றுமில்லை? 1 என்ற எண்ணிணை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜ்ஜியத்திற்குப் பின்னால் இந்த 1ஐ வையுங்கள். இப்போது அதன் மதிப்பு 10. பூஜ்ஜியமோ ஒன்றுமில்லை. ஒன்றுமிலாததை மதித்து அதற்குப் பின்னால் 1ஐ வைத்தால், அதன் மதிப்பு பத்தாகிவிட்டது. பூஜ்யத்திற்கு ஒன்றுமே இல்லாத போதும் பூஜ்யத்தை அலட்சியப்படுத்தி 1ஐ முன்னாள் போட்டால் 1 இன் மதிப்பு பத்தில் ஒன்று [0.1].


அது போன்று இறைவன் நிறைவானவன். தனக்கென்று தனி மதிப்பு இல்லாதவன். யார் அவனைச் சேர்ந்தார்களோ, அவர்களுடைய மதிப்பை உயர்த்தக் கூடியவன். யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள். இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள். இறைநிலையை உணர்ந்து அதை மதிப்பவர்களைப் பூஜ்யர் என்பார்கள்".


வியத்தகு எண் பூஜ்யம்:-
★★★★★★★★★★

"தன்னிறைவாய் இருந்திடினும் தான்பாழாய், கருத்திற்குத்
தனக்கென்றோர் தனிமதிப்பு ஏதுமின்றித்
தன்னை முன்பின்னாகச் சார்ந்துநிற்கும் எண்களுக்குத்
தக்கபடி இடமொக்க மதிப்பளித்து
தன்னைப்போல் மற்றும்ஒரு எண்கொண்டு அதைவைத்து
தனைக்கூட்ட வகுக்க பெருக்கக் கழிக்கத்
தன்மதிப்பு மாறாத தகைமையுள முழுவடிவ
தனிச்சிறப்பு உடைய வியத்தகு எண்பூஜ்யம்."


"எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவுமவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்
காணும் இன்ப துன்பமவன்".

"அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம் நீ
அவனில்தான் நீ, உன்னில் அவன்
அவன் யார் ? நீ யார் ? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன்
அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
அறிவு முழுமை அதுமுக்தி"


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”