எனக்கு அடிக்கடி பயம் ஏற்படுகிறது. அது ஏன்?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

எனக்கு அடிக்கடி பயம் ஏற்படுகிறது. அது ஏன்?

Post by marmayogi » Tue Jun 14, 2016 5:14 pm

கேள்வி: எனக்கு அடிக்கடி பயம் ஏற்படுகிறது. அது ஏன்?

எதிர்பாராதவிதமாக மனதிற்கு அதிர்ச்சியூட்டும் செயல்களால் பாதிப்பு ஏற்பட்டோ அல்லது அடிக்கடி சினப்பட்டதாலோ உடலின் நரம்புகள் தளர்ச்சியுற்றுள்ளது. அடிக்கடி இவ்வாறு அதிர்ச்சி ஏற்படும் போது அதை தாங்க முடியாமல் மனதில் பயம் தோன்றுகிறது. பெரும்பாலும் மக்கள் ஏதோ ஒரு வகையில் விந்து நாதத்தை (Sxual Vital Fluid) இழந்து விடுகிறார்கள். இவ்வாறு உயிர்ச்ச் சக்தியை அதிக அளவு இழப்பதாலும் பயம் தோன்றுகிறது.
உடலை நல்ல முறையில் பாதுகாத்து, நரம்புத் தளர்ச்சி ஏற்படாது இருக்க உடற்பயிற்சியுடன் காயகல்பப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வரவேண்டும். மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள தியானமும், நல்ல ஒழுக்கப் பழக்கங்களையும் கடைப்பிடித்து வரவேண்டும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”