ஜீவகாந்தம் உடலில் எவ்வளவு செலவாகிறதோ அதே அளவு சக்தி களத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்றதென்றால் ஏன் முதுமை ஏற்படுகின்றது

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஜீவகாந்தம் உடலில் எவ்வளவு செலவாகிறதோ அதே அளவு சக்தி களத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்றதென்றால் ஏன் முதுமை ஏற்படுகின்றது

Post by marmayogi » Thu May 26, 2016 8:50 am

கேள்வி: ஜீவகாந்தம் உடலில் எவ்வளவு செலவாகிறதோ அதே அளவு சக்தி களத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்றதென்றால் ஏன் முதுமை ஏற்படுகின்றது?

பதில்: நாம் இந்த உலகத்தில் இருப்பதால்தான் முதுமை வருகின்றது. தனியாக இந்த உலகத்தைத் தாண்டி வான் வெளியில் வாழ்ந்தால் முதுமை வராது. இந்த உலகம் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் மைல் வேகத்தில் தன்னைத்தானே ஒரு சுற்றுச் சுற்றுகிறது. நாமும் அதனுடன் இணைந்தே சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

இதனால் உடலின் கனத்த அணுக்கலெல்லாம் பூமியின் மையத்தை நோக்கி நிற்கின்றன. லேசான அணுக்களெல்லாம் எதிர்த்திசையில் சிதறுகின்றன. பூமியின் சழற்சியினால் உடலில் இரண்டு விதமான இயக்கங்கள் ஏற்படுகின்றன. ஒன்று ஈர்ப்பு ஆற்றல் (Force of attraction) மற்றொன்று தள்ளும் சக்தி (Force of repulsion) இதனால் லேசான பொருட்களையெல்லாம் மேலே தள்ளுகிறது. கெட்டியான பொருட்களையெல்லாம் கீழே இழுக்கிறது. பருப்பொருட்களையெல்லாம் பூமி தன் நடுமையம் நோக்கி இழுக்கின்றது. லேசான உயிர்ப்பொருட்களையெல்லாம் மேல் நோக்கித் தள்ளுகிறது. இதனால் தினந்தோறும் கோடிக்கணக்கான செல்கள் உடலிலிருந்து உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன.

அதே போன்று உயிரணுக்களும் வெளியேறுகின்றன. அதனால் மனித உடலுக்கு அவ்வப்பொழுது “இழப்பு” ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இந்த இழப்பை ஈடுகட்டுவதற்குத்தான் அவ்வப்பொழுது உணவு, நீர், காற்று (மூச்சு) இவை தேவையாகின்றன. அதைத்தான் “பிழைப்பு” என்று சொல்கிறோம்.
ஒவ்வொரு நாளும் இந்த உலக இயக்கத்தினால் உடற்செல்களைப் பூமி அதன் மையம் நோக்கி இழுத்துக் கொண்டேயிருக்கின்றது. அரூபமான உயிரைப் பூமியில் கவர்ச்சியாற்றல் இழுக்க முடியாது. உடற்செல்கள் கீழ்நோக்கி இழுக்கப்பட இதனால் லேசான உயிர் மேனோக்கி உந்தப்பட, இரண்டுக்கும் தொடர்பு விட்டுக் கொண்டேயிருக்கிறது.

இரண்டும் பிரிவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது. மனித வாழ்கை 120 ஆண்டுகள் என்று சொல்வார்கள். அதுவரை இந்தப் பூமியின் சுழற்சியினால் உடலுக்கும். உயிருக்கும் தினந்தோறும் சிறுகச் சிறுகப் பிரிவு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இதைத்தான் வள்ளுவரும்,
”நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்க்கும்
வாள்அது உணர்வார்ப் பெறின்”
என்றார். பூமியின் சுழற்சியால் தினந்தோறும் நரம்புகள் தளர்ச்சியுறுகின்றன. அதனால் முதுமை வந்து கொண்டேயிருக்கிறது.

வாழ்க வளமுடன்!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”