விஞ்ஞானமும் – ஞானமும்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

விஞ்ஞானமும் – ஞானமும்

Post by marmayogi » Tue May 24, 2016 10:49 am

அறிவை அகண்டாகாரத்தே செலுத்தி,
அணுவிலும் நின்றொடுங்கி, ஆழ்ந்தாராய்ந்து ,
அறிவாலே அண்டம், பிண்டம், அரூபம், ரூபம்,
அறிந்துவிட்டீர்! விஞ்ஞான நிபுணரே! நம்
அறிவு எது? எங்குளது? அந்தமென்ன ?
அணுவிலே உள ஆற்றல் பிறந்த தெங்கே?
அறிவாலே ஒன்றிஒன்றி ஆய்ந்து பாரீர்.
அணுவுக்கு அப்பாலே இரண்டும் ஒன்றாம்.

அகண்டாகாரமாக, நிறைவாக உள்ள, வெட்டவெளியில் ஞாபகத்தைச் செலுத்தி, அதனில் மிதந்து, உருண்டு, இயங்கிக் கொண்டிருக்கும் பல கோள்கள், நட்சத்திரங்கள், உலகங்கள் இவைகளின் விபரங்களையும் எல்லாத் தோற்றப் பொருட்களுக்கும் மூலமாக, மிக நுண்ணியதாக உள்ள, அணுவில் நினைவை ஒடுக்கிக் கூர்ந்து ஆராய்ந்து, அதன் இயல்பையும், சக்தியையும் அறிந்துவிட்ட விஞ்ஞான நிபுணர்களே!

நாம் என்று சொல்லப்படும் அறிவு என்ற தத்துவம் எது? எங்கே இருக்கிறது? எவ்விதம் இயங்குகிறது? அதன் ஆரம்பம் முடிவு என்ன? என்றும், அணுவுக்குள் இயங்கும் சக்தி பிறந்த இடம் எது? அது முடியும் இடம்தான் எது? என்றும் உங்கள் அறிவைச் செலுத்தி ஐம்புலன்களை கடந்து சிந்தனை செய்யுங்கள்.

அணுவுக்கு அப்பால், அணுவைத் தாங்கியுள்ள, சூனியம் என்று சொல்லப்படும் வெளியே, அணுவில் இயக்கச் சக்தியாகவும், நம்மில் உணரும் சக்தியாக உள்ள அறிவாகவும் இருக்கும் ஒருமைத் தத்துவத்தை, தெளிவாக அறிந்து கொள்வீர்கள்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: விஞ்ஞானமும் – ஞானமும்

Post by marmayogi » Tue May 24, 2016 10:53 am

Science and Revelation

By advancement of science you know about the atom, the Universe, the physical world and living beings. Just ask yourself this question: “What is consciousness; what is its nature, its origin and its end?” Another question to be asked is: “There is some force within and beyond the atom; what is that force, its nature, its origin and its end?”

There is one and the same answer to both questions. You will find the wonderful answer that both are the same and this is you are the consciousness. This truth will enable you to fulfill all sciences to its perfection and you can do many more marvels in the material world and relieve mankind from all problems and assure World Peace.

- Vethathiri
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”