சூரியனிலிருந்து ஒளி, வெப்பம் வரவில்லை. அலைதான் வருகிறது என்று சொல்கிறீர்களே, எவ்வாறு?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

சூரியனிலிருந்து ஒளி, வெப்பம் வரவில்லை. அலைதான் வருகிறது என்று சொல்கிறீர்களே, எவ்வாறு?

Post by marmayogi » Tue May 24, 2016 10:43 am

கேள்வி: சூரியனிலிருந்து ஒளி, வெப்பம் வரவில்லை. அலைதான் வருகிறது என்று சொல்கிறீர்களே, எவ்வாறு?

பதில்: சூரியனிலிருந்து அலைதான் வருகிறது. அந்த அலை பூமியில் உள்ள பொருட்களின் மீது மோதும் போது அந்தப் பொருட்களிலுள்ள அணுக்களின் தன்மைக்கேற்ப ஒளியும், வெப்பமும் உண்டாகிறன. உதாரனமாக இரும்பில்படும்போதும், கல்லில்படும்போதும், கண்ணாடியில்படும்போதும், தண்ணீரில்படும்போதும், தரையில்படும்போதும், அந்தந்தப் பொருட்களின் தன்மைக்கேற்ப ஒளியும் வெப்பமும் மாறுபடுகின்றன என்பதை நாம் அறிவோம். ஒளியினுடைய பிரதிபலிப்பு உண்டாகும்போது தானாகவே வெப்பமும் உண்டாகிறது.
எந்தப் பொருளிலிருந்து அலை கிளம்பினாலும் அது அந்தப் பொருளின் தன்மையைக் கொண்டிருக்கும். எந்தப் பொருள் மீது மோதுகின்றதோ அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மூலப்பொருளின் தன்மை இங்கே பிரதிபலிக்கும். சூரியனுடைய அலையில் சூரியனுடைய தண்மையான ஒளியும், வெப்பமும் அடங்கியுள்ளன. உதாரணமாக நாம் பூமியிலிருந்து 50,000 அடிகளுக்கு மேலே சென்றால், அங்கேயே O`c அல்லது அதற்குக் குறைவான வெப்பநிலையும், இருட்டாகவும் இருப்பதைக் காணலாம். ஆனால் பூமியில் 35`c, 40`c கூடவெப்பநிலை இருக்கிறது, சூரியனிலிருந்து வெப்பம் வருகிறதென்றால் வெளி மண்டலத்தில் வரும் வழியில் மத்தியில் குளிர்ந்து பிறகு சூடு அதிகரிக்குமா? நமக்குக் கிடைக்கக் கூடிய வெப்பமெல்லாம் சூரிய அலை பூமியிலுள்ள பொருட்களின் மீது பட்டு இங்குத்தூண்டப் பெற்று பிரதிபலிக்கக் கூடிய வெப்பமும் ஒளியும்தான்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”