வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர் என்பதற்கு என்ன ஆதாரம்?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர் என்பதற்கு என்ன ஆதாரம்?

Post by marmayogi » Fri May 06, 2016 11:42 am

1. வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர் என்பதற்கு என்ன ஆதாரம்?

தான் பெற்ற முத்தேக சித்தியைப் பல பாடல்களில் எடுத்துரைக்கின்றார். உதாரணத்துக்கு ஒரு பாடல்,

நானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு (5513)
ஆடுகின்ற சேவடிக்கே அளானேன் மாளாத யாக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடுவிருந்து குலாவுகின்றேன்
பாடுகின்றேன் எந்தை பிரான் பதப்புகழைப் பாடிப்பாடி
நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன் எண்ணமெலாம் நிரம்பினேனே (56)
==================
இந்தப் பாடலாலும், இவை போன்ற பலப் பல பாடல்களும் அவர் பெற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பறை சாற்றுகின்றன.
இந்த உடம்பை மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாக்காமல் 1874ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் அவர் கதவைத் தாளிட்டுக் கொண்டதின் மூலம் அவர் பெற்ற மரணமிலாப் பெருவாழ்வு உறுதியாகிறது.

2. வள்ளலார் அடைந்த உண்மையான நிலைதான் என்ன?

வள்ளலார் தான் செய்த தவத்தாலும், ஜீவகாருண்யத்தாலும், தன் தூல தேகத்தை ஒளியுடம்பாக மாற்றினார். சுத்த தேகமாக முதலில் அவர் தேகம் மாறியது. பிறகு அதே தேகம் பிரணவ தேகமாகியது. கடைசியாக அவர் ஞான தேகம் பெற்றார். அவர் ஞான தேகத்தோடு என்றும் அழியாத நிலையில் நமக்குத் துணையாக இருக்கின்றார்.

3. அவர் ஒளியுடம்பு பெற்றதற்கு என்ன ஆதாரம்?

வள்ளலாரின் சம காலத்தவர்களாகிய இராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர் ஆகியோரின் நிழல் படங்கள் உள்ளன. ஆனால் பல முறை முயன்றும் வள்ளலாரை நிழற் படம் எடுக்க முடியவில்லை. இப்போது உள்ள வள்ளலார் படங்களெல்லாம் வரைந்த உருவப் படங்களேயொழிய அவரது உண்மையான நிழற்படங்கள் அல்ல. அவரது தூல தேகம் ஒளியுடம்பாக மாறி விட்டதால் அவரை நிழற்படம் எடுக்க முடியாது போய்விட்டது. இதுவே அவர் ஒளியுடம்பு பெற்றதற்கு ஆதாரம். அவரும் பல பாடல்களில் தான் ஒளி உடம்பு பெற்றதை அறிவிக்கின்றார்.

கற்றேன் சிற்றம் பலக்கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்றெனப் பற்றினனே (4745)
=============================

திரு மு.பா. அவர்களின் நூலிலிருந்து
Thanks to Iso Anna Durai ayya,
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”