பிணம் தின்னுவதேன்! பிணமாய் மாறுவதேன்!!( எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பிணம் தின்னுவதேன்! பிணமாய் மாறுவதேன்!!( எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க)

Post by marmayogi » Sat Apr 30, 2016 7:04 pm

ஐந்தரிவு கொண்ட மிருகங்களின் விண்ணப்பம் !
ஆறு அறிவு கொண்ட மனிதர்களே!
காடுகளில் வாழ்ந்தீர். நாடொடிகளாய் திரிந்தீர். பின்பு பண்பாடு கற்றீர். நாகரீகம் வளர்த்தீர். நகரங்களை உருவாக்கினீர். இருந்தும் என்ன ஆடு, மாடு, கோழி, மீன்களாகிய எம்மை கொன்று தின்னும் காட்டுமிரண்டிதனத்தை மட்டும் கைவிடவில்லை. எங்களில் அதிகபட்சம் சாகபட்சிநிகளே! புள் புண்டுகளை தின்று வளர்ந்த எம் உடல்களை உண்பதை காட்டிலும் இயற்கையாய் வளரும் பயிர் பச்சைகளை உண்பது அறிவுடைமை என்பதை உணர்வீர்! எங்களில் அதிக சக்தி வாழ்ந்த யானை சாக பட்சினி தான். உங்களில் யாரேனும் இயற்கையாய் மரணமடைந்தாலும் ஆயிரம் சடங்குகள் செய்து மண் மாதாவின் மடியில் செர்க்கின்றீர். எம்மை மட்டும் கொன்று வும் வயிற்றில் புதைப்பது என்ன நியாயம்?
இயற்கையில் பருப்பு வகைகளில் கிடைக்கும் புரதத்தை (ப்ரோட்டீன்) விட்டு எம்மை கொன்று, கொன்ற கணம் முதலே அழுக ஆரம்பித்துவிடும் எம் வுடலை தின்று நோய்வாய்படுகினரீர். மனித குலத்திற்கே தலையாயதான கருணை, இறக்கம் உள்ளிட்ட மென்மையான குணங்களை இழ்ந்து கோபம், தாபம் வளர்த்து குற்றங்களுக்கும் துணிகின்ரீர். மிருககாட்சி சாலையில் கவனியுங்கள். சாக பட்சினிகள் யாவும் அமைதியாக இருக்கும். மாமிசபட்சிநிகளோ அலைபாய்ந்தவண்ணமே இருக்கும். வாழ்வாதாரமான தண்ணீரை உறிஞ்சி குடிக்கும் யோகம் சாகபட்சிணிகளுக்கு மட்டுமே உண்டு. மாமிச பட்சினிகள் நக்கித்தான் குடிக்கும். இது இறைவன் ஏற்பாடு. முன்னொரு காலத்தில் மனித உடல் பெற்றிருந்து, மாமிசம் உண்டதால் இப்பிறவியில் மிருக உடல் தாங்கி கருமம் தொலைக்க வந்தோம். எம்மை கொன்று தின்று எம் கருமங்களை நீங்கள் சுமப்பது நல்லதா? சிந்திப்பீர்! செயல்படுவீர்!
நம் எண்ணங்களுக்கேற்ப உடலிலான சுரப்பிகளின் செயல்பாடும், சுரப்பும் மாறும். எம்மை கொல்ல நீங்கள் கத்தியை தீட்டும்போதே எம் உடலிலான சுரப்பிகள் கேடு விளைவிக்கும் அமிலங்களை சுரந்துவிடுகின்றன. மேட்டபாலிசமே மாறிவிடுகின்றது. இவ்வாறாய் அமிலம் கலந்த எம் உடலை நாற்றம் தெரியாதிருக்க உப்பும், உரப்பும், காரமும், வாசனை பொருட்களையும் சேர்த்து அழுகிய உடல் மேலும் அழுகாதிருக்க மசாலா தினுசுகள் சேர்த்து, உண்டு நீங்கள் அடைவதென்ன? அஜீரணம், வாயு உபத்திரவம், அல்சர், ரத்தக்கொதிப்பு, பைல்ஸ், கொலஸ்த்ரால், மாரடைப்பு இவைதானே!
பிணம் தின்னுவதேன்!
பிணமாய் மாறுவதேன்!!
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”