மனிதனாக பிறந்துவிட்டாலே அவன் சாவை வெல்ல தகுதியானவன்.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மனிதனாக பிறந்துவிட்டாலே அவன் சாவை வெல்ல தகுதியானவன்.

Post by marmayogi » Sat Apr 30, 2016 10:12 am

காயம் என்பது உடல். கற்பம் என்பது பிரமனின் ஒரு பகற்பொழுது ஆகும். பிரமனின் ஒரு பகற்பொழுது கிட்டத்தட்ட 432 கோடி ஆண்டுகள் ஆகும். ஆக நம் உடலானது 432 கோடி ஆண்டுகளாக சிதையாது அழியாது எந்நிலையிலிருந்
தாலும் எம்மாறுதலடைந்தாலும் அப்படியே இருக்க வைக்க எடுக்கும் முயற்சியும் முயற்சியே பயிற்சியும் ஆகும்.


மரணமில்லா பெருவாழ்வு வாழ முடியும் என சத்தியம் சொல்கின்றேன் என்றார் வள்ளலார் . அதை பற்றி யாரும் அக்கறை கொள்ளவோ , ஆய்வு செய்து அவர் சொல்படி வாழ்வை அமைத்து கொள்ளவோ யாரும் விரும்பவில்லை !!

வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்! புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்! பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே!
Last edited by marmayogi on Sat Apr 30, 2016 2:08 pm, edited 1 time in total.
வெங்கட்
Cash on hand: Locked

Re: மனிதனாக பிறந்துவிட்டாலே அவன் சாவை வெல்ல தகுதியானவன்.

Post by வெங்கட் » Sat Apr 30, 2016 10:36 am

விரும்பவில்லை என்பதைவிட முடியவில்லை எனலாம். (ஆனால் விருப்பம் உறுதியாக இருக்கும்பட்சத்தில் முடியாது என்பது இல்லை என்பதும் சாியே.)

மனித உள்மனம் (subconcious mind) என்பது சக்திவாய்ந்தது. வெளிமனம் (conscious mind) என்பது புதையலைக் காவல் காக்கும் நாய் போன்றது. தானும் புதையலை அனுபவிக்காது; எதையும் அருகில் அண்டவிடாது. (தா்க்கம், சந்தேகம், அச்சம் மற்றும் logic போன்ற ஆயுதங்களைக் கொண்டு நம்மை நாமே புதையலை அண்டவிடாமல் செய்வது.)

Logic மற்றும் சந்தேகங்களை ஒதுக்கிவிட்டு மக்கள் உலகைப் பாா்ப்பாா்களேயானால் மனிதஅறிவிற்கு எட்டாத, logic என்ற வலையில் அடங்காத பல விஷயங்கள் இருப்பது புாியும். சாத்தியம் என்பதும் புாியும்.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: மனிதனாக பிறந்துவிட்டாலே அவன் சாவை வெல்ல தகுதியானவன்.

Post by kumarsvm » Sat Apr 30, 2016 1:13 pm

திரு.வெங்கட்ராமன் அவர்களே,.இத்தளத்தில் நீங்கள் கூறியதாவது.தன் நிலை தெரிந்தவர் கீழே இறங்கி வரக்கூடாது.விட்டுத்தள்ளுங்கள்.தெய்வம் நேரடியாகத் தோன்றமாட்டார்.அந்த சக்தி யார் மூலமாவது உங்களிடம் சில செயல்களச் செய்யச் சொல்வார்.இது ஐதீகம்.தாங்கள் எவரிடம் பேசுகிறீர்களோ ஆண்டவன் உங்களை அவரிடம் அனுப்பி அவர் சார்ந்ததைச் சொல்லச் சொல்லுவார்.என் பிரச்னை வல்லவர் நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்.தீர்ப்பீர்களா?ஆம் என்றால் தொடரவேன். இ.எ. என்றால் விலகிவிடுவேன். நன்றி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”