உயிர் உடலைவிட்டு நீங்கிய பின்பு அந்த உயிருக்கு இன்ப, துன்ப உணர்வு உண்டா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

உயிர் உடலைவிட்டு நீங்கிய பின்பு அந்த உயிருக்கு இன்ப, துன்ப உணர்வு உண்டா?

Post by marmayogi » Fri Apr 29, 2016 3:05 pm

கேள்வி: உயிர் உடலைவிட்டு நீங்கிய பின்பு அந்த உயிருக்கு இன்ப, துன்ப உணர்வு உண்டா?


பதில்: உடலைவிட்டு நீங்கிய உயிருக்கு இன்ப, துன்ப உணர்வு இல்லை. இன்பத்தையோ, துன்பத்தையோ உணர்வதற்கு உயிருக்கு உடல் வேண்டும். உடல் தான் பரிசோதனைக்களம். உடலும், உயிரும் இணையும் போதுதான் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய உணர்வுகள் தோன்ற முடியும்.
பஞ்சபூதங்களில் கெட்டிப்பொருள், நீர், வெப்பம், காற்று முதலிய நான்கு பூதங்களும் சேர்ந்து இருக்கும்.

அமைப்பில் விண் என்ற ஐந்தாவது பூதம் சுழன்றோடும் பொழுதுதான்,
தடையுணர்தல் (Cognition),
இன்ப, துன்ப உணர்வடைதல் (Experience),
ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தறிதல் (Discrimination)
என்ற உணர்தலின் மூன்று நிலைகளும் தோன்றும்.
உடல் இணைப்பு சேர்ந்தால்தான் இன்ப, துன்ப உணர்வு இருக்குமே தவிர, தனி உயிருக்கு அவ்வுணர்வு இருக்காது.

பரு உடல் (Physical Body)
நுண்ணுடல் (Astral Body)
கருமையம் (Genitic Centre)
மூளை (Brain)
புலன்கள் (Senses)
காந்தச் சுழல் (Magnetic Circulation)
ரத்தச் சுழல் (Blood Circulation)
விந்து (Vital Fluid)
ஆகிய எட்டு வகையும் ஒன்றிணைந்து இயங்கும் போதுதான் இன்பம், துன்பம் எனும் உணர்வுகள் உண்டாகும். இவற்றில் ஒன்று செயல்படாவிட்டாலும் மனம் இல்லை; இன்ப, துன்ப உணர்வுகளும் இல்லை.


வாழ்க வளமுடன்!
:-அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”