நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?

Post by marmayogi » Thu Apr 28, 2016 4:48 pm

கேள்வி: நமது குண்டலினி யோகம் பயின்ற ஒருவருக்கு, மூன்று வருடம் கழித்து இந்தக் காலத்தில், கிரஹ நிலைப்படி மரணம் வரும் என்று ஜோதிடரால் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படியுள்ளவர் நமது நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?


வேதாத்திரி மகரிஷியின் விடை: முடியும். தியானம் செய்து வந்தாலே மரணத்தைத் தள்ளிப் போட்டு விடலாம். தவம் செய்யும் போது பீட்டா வேவிலிருந்து ஆல்பா வேவுக்கு மன அலை வந்துவிடுகிறது. அலை நீளம் குறைவதால் உயிராற்றல் சேமிக்கப்படுகிறது. மரணம் வெல்லப்படுகிறது.
நவக்கிரகங்களில் தவம் செய்தால் நிச்சயமாக மரணத்தைத் தள்ளிப் போட்டு விடலாம்; ஆனால் தினம்தோறும் நவக்கிரகத்தில் இருந்து சம்யமமாகி தவம்செய்து வரவேண்டும். சங்கற்பம், வாழ்த்து, காப்பு இவைகளை முறையாகக் கூறி வரவேண்டும்.
எனக்கு 52 வயது தான் என்று சோதிடர்கள் கூறினார்கள். நான் வந்த வேலை இன்னும் இருக்கிறது. ஆகையால் எனக்கு இப்போது மரணம் இல்லையென கூறினேன். நமது யோக முறையினால் மரணம் வெல்லப்பட்டது.

- வேதாத்திரி மகரிஷி
வெங்கட்
Cash on hand: Locked

Re: நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?

Post by வெங்கட் » Thu Apr 28, 2016 5:10 pm

ஆல்ஃபா தியான நிலையை அனுபவித்துள்ளேன். அற்புதம். (நடக்கவே நடக்காது என்று நினைத்த விஷயம் கூட ஆல்ஃபா தியானத்தினால் நிகழ்ந்தது மிகவும் ஆச்சாியம்.)

உயிராற்றல் சேமிக்கப்படுவது என்பதை இப்போதுதான் அறிகிறேன். மிகவும் நல்லது.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?

Post by kumarsvm » Fri Apr 29, 2016 8:36 am

ஆல்பா பீட்டா வேவ்களின் குணங்கள் என்ன என்ன என்று தெரியாமல் உங்கள் கேள்விக்கான விடை சுலபமாக சொல்லக்குடிய ஒன்று அல்ல.சமீபத்தில் உங்களால் இத்தளத்தில் பதியப்பட்ட செல்பி மனிதன் ஒரு பாறையில் இரத்த காயத்துடன் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டான். அவனிடத்தில் என்ன வேவ் பீட்டாவா அல்லது ஆல்பாவா எது அவனை குடிக்கச் சொல்லி பின் செல்பி எடுக்கச் சொல்லி வைத்தது.மகரிஷி வாழ்ந்த காலத்தில் ஒன்பது கிரகம் தான் இருந்தது. தற்போது அப்படியில்லை.செல்பி எடுத்தது , குடித்தது எந்த கிரகங்களின் ஆதிக்கங்கள்.ஆகவே ரிஷியின் விடை மீண்டும் ஆராய்ந்து முடிவு எடுக்கப்பட வேண்டிய மற்றொன்று. தொடரும் வேவ்களின் ஆராய்ச்சிக்குப் பிறகு.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?

Post by marmayogi » Fri Apr 29, 2016 10:00 am

kumarsvm wrote:ஆல்பா பீட்டா வேவ்களின் குணங்கள் என்ன என்ன என்று தெரியாமல் உங்கள் கேள்விக்கான விடை சுலபமாக சொல்லக்குடிய ஒன்று அல்ல.சமீபத்தில் உங்களால் இத்தளத்தில் பதியப்பட்ட செல்பி மனிதன் ஒரு பாறையில் இரத்த காயத்துடன் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டான். அவனிடத்தில் என்ன வேவ் பீட்டாவா அல்லது ஆல்பாவா எது அவனை குடிக்கச் சொல்லி பின் செல்பி எடுக்கச் சொல்லி வைத்தது.மகரிஷி வாழ்ந்த காலத்தில் ஒன்பது கிரகம் தான் இருந்தது. தற்போது அப்படியில்லை.செல்பி எடுத்தது , குடித்தது எந்த கிரகங்களின் ஆதிக்கங்கள்.ஆகவே ரிஷியின் விடை மீண்டும் ஆராய்ந்து முடிவு எடுக்கப்பட வேண்டிய மற்றொன்று. தொடரும் வேவ்களின் ஆராய்ச்சிக்குப் பிறகு.
நல்லது. பான்பிராக்கை வாயில் மின்றுகொண்டு செல்பி புள்ள செல்பி புள்ள என்று பாட்டுபாடிக்கொண்டு மலையில் இருந்து குதித்தது அவருடைய மதிமயங்கிய செயல். இதற்கு எந்த கிரகங்களும் பொருப்பாக முடியாது.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?

Post by kumarsvm » Fri Apr 29, 2016 5:16 pm

திரு.வெங்கட் அவர்களுக்கு, பதில் சொல்கிறேன். கிரகங்களுக்கு பொறுப்பில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறுவது சரியா? இக்கால விஞ்ஞானம் என்ன கூறுகிறது.வெற்றிலையின் நிறம் பச்சை.பச்சையாகத் தெரிந்தால் மனம் மகிழும். பச்சையாக சில காய், கீரைவகைகளை சாப்பிட முடிகிறது ஏன்? எல்லாம் கிரகம் தான் முழுக்க முழக்க காரணம்.சிவப்பு நிறம் ஆனவுடன் அது கனி என்கிறோம்.புகையிலை புற்று நோய்க்கு வழி வகுக்கும்.மரணம் ஒரு கிரகத்தின் தாக்கம்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?

Post by வெங்கட் » Fri Apr 29, 2016 5:34 pm

மனிதனாகப் பிறந்தவா்களுக்கு பகுத்து ஆராய்ந்து ஒரு செயலைச் செய்யவோ செய்யாமலிருக்கவோ, கிட்டத்தட்ட கடவுளுக்கிணையான உாிமை (free will) வழங்கப்பட்டுள்ளது.

கிரகங்களின் தாக்கம் இருந்தாலும், அதை வெல்லும் அறிவும் கொடுக்கப்பட்டுள்ளதால், செயல்களுக்கும்,விளைவுகளுக்கும் அவரவரே பொறுப்பு.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?

Post by kumarsvm » Fri Apr 29, 2016 6:11 pm

நன்றி வெ..ட் அவர்களே,
இதை இதைத்தான் உங்களிடம் எதிர் பார்த்தேன்.எனக்கு நிகழ்கால மனிதர்களின் அணுபவம் தான் தேவை. வேத ரிஷி. மூலவர். வள்ளலார், இராமனுஜர் வாழ்ந்தக் காலத்து அணுபவம் இந்தக் காலத்திற்கு ஒத்து வருமா? அக்கால மனிதர்கள் இக்காலவர்கள் போட்டியில் வெற்றியடைய முடியுமா?
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?

Post by marmayogi » Sat Apr 30, 2016 9:47 am

kumarsvm wrote:வேத ரிஷி. மூலவர். வள்ளலார், இராமனுஜர் வாழ்ந்தக் காலத்து அணுபவம் இந்தக் காலத்திற்கு ஒத்து வருமா? அக்கால மனிதர்கள் இக்காலவர்கள் போட்டியில் வெற்றியடைய முடியுமா?

காயம் என்பது உடல். கற்பம் என்பது பிரமனின் ஒரு பகற்பொழுது ஆகும். பிரமனின் ஒரு பகற்பொழுது கிட்டத்தட்ட 432 கோடி ஆண்டுகள் ஆகும். ஆக நம் உடலானது 432 கோடி ஆண்டுகளாக சிதையாது அழியாது எந்நிலையிலிருந்
தாலும் எம்மாறுதலடைந்தாலும் அப்படியே இருக்க வைக்க எடுக்கும் முயற்சியும் முயற்சியே பயிற்சியும் ஆகும்.


மரணமில்லா பெருவாழ்வு வாழ முடியும் என சத்தியம் சொல்கின்றேன் என்றார் வள்ளலார் . அதை பற்றி யாரும் அக்கறை கொள்ளவோ , ஆய்வு செய்து அவர் சொல்படி வாழ்வை அமைத்து கொள்ளவோ யாரும் விரும்பவில்லை !!
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”