நான் யார்?.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

நான் யார்?.

Post by marmayogi » Sat Mar 26, 2016 4:41 pm

நீ பிறந்த போது உனக்கு பெயர் என்கிற அடையாளம் கிடையாது .
நீ பிறக்கும் போது உனக்கு மதம் , சாதி , நாடு, இனம் ,
என்கிற எந்த அடையாளமும் கிடையாது .
நீ பிறந்த போது உனக்கு மனம் என்கிற ஒன்றும் கிடையாது .


நான் , எனது என்பதும் உன் உள்ளத்தில் எதுவும் கிடையாது .
என் குடும்பம், எனது சொந்தம் , என் சமுதாயம் ,
இப்படி எந்த கருத்தும் உன்னிடம் கிடையாது .
பெயர் , மதம் , சாதி , நாடு , இனம் , மனம் , நான் , எனது , சொந்தம், எல்லாமே பின்பு சேர்க்கப் பட்டது .
இவர் தற்காலிமாக பயன்படுத்திக் கொள்ள உருவாக்கப் பட்ட பயனுள்ள ஒரு பொய் .
ஆனால் இப்போது இந்த பொய்யே உண்மையாக ஆகிவிட்டது .
உங்களை யார் என்று கேட்டால் பெயரை சொல்வீர்கள் .
அல்லது செய்யும் வேலையை நான் ( நான் டாக்டர் , நான் வக்கீல், இப்படி பல தரப் பட்ட வேலையை நீங்கள் என்று சொல்வீர்கள் )என்று சொல்வீர்கள் ,
ஆனால் இவை எல்லாமே நீங்கள் செய்யும் செயல்கள் இவை நீங்கள் அல்ல .

நமக்கு பயன்படும் என்று சேர்க்கப் பட்ட இந்த பொய்யே நான் என்று வாழ்கிறோம் . இது தான் துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரணம் .
சிறு வயது இருக்கும் போது இருந்த உடல் நாளடைவில் வளர்ந்து கொண்டே செல்கிறது . இந்த உடல் கூட நாம் குடி இருக்கும் , நாம் பயன்படுத்தும் ஒரு கருவி தான் .
உடலும் நாம் அல்ல .
நான் ஆண், நான் பெண் என்பது உடலுக்கு தானே தவிர நமக்கு அல்ல ..

இந்த அடையாளம் சேர்த்தது என்று உணர்த்து விட்டு ,
அடையாளங்களை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துக் கொண்டு ,
இந்த நாம் சேர்த்த ஒட்டுமொத்த அடையாளத்தையும் கழித்து விட்டு ,
நாம் நாமாக இருக்கும் போது சத்தியத்தை உணர முடியும்

:- ஓஷோ
வெங்கட்
Cash on hand: Locked

Re: நான் யார்?.

Post by வெங்கட் » Sat Mar 26, 2016 5:12 pm

:clab: :clab: :clab:
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: நான் யார்?.

Post by kumarsvm » Fri Apr 29, 2016 6:25 pm

நான் ஒரு உயிர் மெய்.என்னை கேட்டால் நான் ஒரு ஜன்மம் என்பேன்.நான் அழிக்கப்படுபவன். நான் அளிக்க கூடியவன்.நானே நான்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”