நாங்கள் கடவுளைத் தேடுகிறோம்,அவரை அடைவது எப்படி?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

நாங்கள் கடவுளைத் தேடுகிறோம்,அவரை அடைவது எப்படி?

Post by marmayogi » Sat Jan 23, 2016 8:19 am

★நீங்கள் அவரை அடைய முடியாது.அவரை நீங்கள் தேடவும் முடியாது.
ஏனெனில்,உங்களுக்கு அவரைத் தெரியாது.
அவர்தான் கடவுள் என்று நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வீர்கள்?
உங்களுக்கு அவரைத் தெரியாது.எங்கு போவீர்கள்?

★எந்த வழியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? அவரை உங்களுக்குத் தெரியாது.இதுதான் அவர் வீடு,இதுதான் அவர் இல்லம் என்று எப்படித் தீர்மானிப்பீர்கள்?
இல்லை-உங்களால் முடியாது.
உங்களால் இறைமையைத் தேட முடியாது.ஆனால் அதற்குத் தேவையில்லை.
ஏனெனில்,இறைமை எப்போதும் உன்னருகில்,உன்னுள் உள்ளது.எப்போது நீ அனுமதித்தாலும்,உன்னைத் தேடிக் கொண்டிருக்கும் அவர் உன்னை அடைந்து விடுவார்.

★கடவுள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்.கடவுள் உன்னை எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறார்.
உன்னிடமிருந்து எந்தத் தேடலும் தேவையில்லை.தேடினால் நீ அதை தவற விட்டுவிடுவாய்.
தேடாதே.! பொறுமையாகவும் ஜாக்கிரதையாகவும் இரு.அவர் வரும்போது நீ திறந்திருப்பாய்.
பலதடவை அவர் வந்து உன் கதவைத் தட்டியுள்ளார்.ஆனால் நீ உறங்கிக்கொண்டிருப்பாய்.
அல்லது அந்தத் தட்டல் உன் காதில் விழுந்தாலும்,"அதை உனக்குத் தகுந்தபடி எடுத்துக் கொண்டிருப்பாய்."
காற்று வேகமாக வீசுகிறது அதனால்தான் என்று நினைப்பாய்.அல்லது யாரோ தட்டுகிறார்கள்.அவர்கள் தாங்களாகவே போய்விடுவார்கள் நான் என் தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நினைப்பாய்.

★இப்படி உங்களுக்குத் தகுந்தபடி எடுத்துக் கொள்ளுவது உங்களுக்கே எதிரி.
அது மட்டுமல்ல அப்படிச் செய்வதில் நீங்கள் மன்னர்கள்.!
எதாயிருந்தாலும் சரி,நீங்கள் உடனடியாக தகுந்தபடி மாற்றி விடுவீர்கள்.
உன் மனது வேலை செய்ய ஆரம்பித்தால் அதை அழைத்து உடனடியாக மாற்றி விடுவாய்.அதற்கு சாயம் பூசிவிடுவாய்.அதற்கு இல்லாத ஒரு அர்த்தத்தை தருவாய்.
உன்னை அதற்குள் திணித்துக்கொள்வாய்.அதை கெடுத்தும் விடுவாய்.
உண்மையை உணக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ள தேவையில்லை.சத்தியத்தைப் பற்றி எந்த சிந்தனையும் தேவையில்லை.

★எவரும் சிந்தனையின் மூலம் சத்தியத்தை அடைந்ததில்லை.
எந்தத் தத்துவமும் தேவையில்லை.தத்துவம் என்பது நடைமுறையை தகுந்தபடி எடுத்துக் கொள்வது.
தயவு செய்து திசை திருப்பாதீர்கள்.
எப்போது நீ அங்கு இருப்பதை உணர்கிறாயோ,அதை நிகழ அனுமதித்து விடு.
அதை நிகழ நீ அனுமதித்தால்,அது மேலும் மேலும் உண்மையாகும்.

:-ஓஷோ
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”