நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால் அந்த வெற்றியால் காலணாவிற்குக்கூட பயனில்லை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால் அந்த வெற்றியால் காலணாவிற்குக்கூட பயனில்லை

Post by marmayogi » Thu Jan 14, 2016 5:28 am

★நீங்கள் வெற்றி பெறலாம்.
ஆனால் அந்த வெற்றியால் காலணாவிற்குக்கூட பயனில்லை.அதனால் உங்களுக்கும் நிறைவு கிடைப்பதில்லை. அந்த வெற்றி உங்களை மலரச் செய்வதில்லை.
உங்கள் ஊழ் நிறைவு பெறாது.
உங்கள் ஜன்மம் சாபல்யம் பெறாது.
உங்களிடம் விதைக்கப்பட்டது விதையாகவே இருக்கும்.

★உங்களைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வரலாம்.அதை நீங்கள் பத்திரமாக வெட்டி வைத்திருக்கலாம்.
அந்த உயிரற்ற தாள்கள்,
நீங்கள் உங்கள் வரவேற்பறையில் கண்ணாடிபோட்டு மாட்டி வைத்திருக்கும் சான்றிதழ்கள் நீங்கள் வெளியே செல்லும் போது அணிந்து கொள்ளும் முக மூடிகள் உங்களுடைய போலிப் புன்னகை - இதெல்லாம் ஒரு நாளும் வாழ்க்கையாகாது.

★ஒவ்வொரு புதுச் செயலும் உங்களை இன்னும் பொய்யின் ஆழத்திற்குக் கொண்டு போகும்.பொய்யில் மூழ்கிக் கிடக்கும் உங்களுக்கு பரவசம் எப்படி கிட்டும்?.இந்த உலகம் போற்றும் குப்பைகளை நீங்கள் சம்பாதிக்கலாம்.
ஆனால் நிஜமானவற்றை நீங்கள் நிச்சயம் இழந்துவிடுவீர்கள்.

;-ஓஷோ
pysulrahuman
Posts: 20
Joined: Wed Mar 04, 2015 8:34 pm
Cash on hand: Locked

Re: நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால் அந்த வெற்றியால் காலணாவிற்குக்கூட பயனில்லை

Post by pysulrahuman » Sat Jan 16, 2016 7:22 am

அருமையான பதிவு :ros: :ros: :ros: :ros: :ros: அருமையான பதிவு
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால் அந்த வெற்றியால் காலணாவிற்குக்கூட பயனில்லை

Post by kumarsvm » Tue Apr 26, 2016 1:22 pm

கருத்துக்கள் அருமையான பதிப்பு என்று சொல்ல அவருக்கு உரிமை உண்டு.ஆண்மீக படுகை எதற்காக நிறுவப்பட்டது? தெரிந்து கொள்வேன் விரைவில்.இல்லை என்றால் தள நிர்வாகி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
*அடக்கம் அமருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.*
என்று மாநகரப் பேருந்தில் காணலாம். மனிதன், பேருந்து தொடர்பு அங்கே.அது போல் படுகை, மேற்பதிவு என்ன தொடர்பு? தொடரும்......,
வெங்கட்
Cash on hand: Locked

Re: நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால் அந்த வெற்றியால் காலணாவிற்குக்கூட பயனில்லை

Post by வெங்கட் » Tue Apr 26, 2016 2:42 pm

உண்மை, திரு. மர்மயோகி.

ஆனால் லௌகீக வாழ்க்கையில் இருந்துகொண்டு இதையெல்லாம் பேசுவதால் ஆவதென்ன? அதற்காக இதைவிடுத்து சன்னியாசம் போகவும் இயலுமா? இதையெல்லாம் யோசிக்க யோசிக்க குழப்பம் தான் மிஞ்சுகிறது. அதனால் "பாதை வகுத்தபின்னே பயந்தென்ன லாபம்? அதில் பயணம் நடத்திவிடு" என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறேன்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால் அந்த வெற்றியால் காலணாவிற்குக்கூட பயனில்லை

Post by marmayogi » Tue Apr 26, 2016 4:03 pm

வெங்கட் wrote:உண்மை, திரு. மர்மயோகி.

ஆனால் லௌகீக வாழ்க்கையில் இருந்துகொண்டு இதையெல்லாம் பேசுவதால் ஆவதென்ன? அதற்காக இதைவிடுத்து சன்னியாசம் போகவும் இயலுமா? இதையெல்லாம் யோசிக்க யோசிக்க குழப்பம் தான் மிஞ்சுகிறது. அதனால் "பாதை வகுத்தபின்னே பயந்தென்ன லாபம்? அதில் பயணம் நடத்திவிடு" என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறேன்.

சன்னியாசம் தேவையில்லை . அக்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் , ரிசிகள் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் இருந்துகொண்டே முக்தி அடைந்து இருக்கிறார்கள் . 14 புள்ளை பெற்றவரும் அவரது கடைமைகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டு 64 ஆவது வயதில் யோக முயற்சி செய்து 74 ஆவது வயதில் சமாதி நிலையை அடைந்து இருக்கிறார்.

பொருட்களோடும் , மக்களோடும் தேவைக்கேற்ப அளவு முறை அறிந்து தொடர்பு கொள்ளும் உறவே துறவாகும் , துறவு என்பது மனத்திற்குத்தான் . இன்ப நுகர்ச்சியில் சிக்கிக் கொள்ளாத மனநிலைதான் உறவில் துறவு என்பதாகும் . இந்த நிலையை உணர்ந்து செய்யும் செயல்களே நிஷ்காமிய கர்மம் ஆகும் .

உலக வாழ்வில் பொருள் , பால், புகழ் , செல்வாக்கு என்ற நான்கில் பற்று ஏற்படுவது இயல்பாகும். கடமை உணர்வோடும், அளவு முறை அறிந்தும், விழிப்புணர்வோடு இப்பற்றுகளை நிறைவேற்றிகொள்வது பிறவிப் பயனை எய்த அவசியமாகிறது .
வெங்கட்
Cash on hand: Locked

Re: நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால் அந்த வெற்றியால் காலணாவிற்குக்கூட பயனில்லை

Post by வெங்கட் » Tue Apr 26, 2016 4:45 pm

பொருட்களோடும், மக்களோடும் தேவைக்கேற்ப அளவு முறை அறிந்து தொடர்பு கொள்ளும் உறவே துறவாகும், துறவு என்பது மனத்திற்குத்தான். இன்ப நுகர்ச்சியில் சிக்கிக் கொள்ளாத மனநிலைதான் உறவில் துறவு என்பதாகும். இந்த நிலையை உணர்ந்து செய்யும் செயல்களே நிஷ்காமிய கர்மம் ஆகும்.
மிகவும் சாி.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால் அந்த வெற்றியால் காலணாவிற்குக்கூட பயனில்லை

Post by kumarsvm » Tue Apr 26, 2016 8:02 pm

வெங்கட்ராமன் அவர்களுக்கு.
நாம் படுகைத் தளத்திற்கு ஏன் வந்துள்ளோம்?சரியா அல்லது தவறா என்பதனை பின்னர் ஆராயலாம்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”