ஆடம்பர ஆன்மீகத்தில் மாட்டிக்கொள்ளாதே !!.ஆடம்பர ஆன்மீகம் என்பது ஒரு நோய்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஆடம்பர ஆன்மீகத்தில் மாட்டிக்கொள்ளாதே !!.ஆடம்பர ஆன்மீகம் என்பது ஒரு நோய்

Post by marmayogi » Thu Jan 14, 2016 5:16 am

★ஒரு டாக்டர் மகன் தன் மருத்துவ படிப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்புகிறான்.அவனது தந்தை விடுமுறை எடுக்காமல் தொழிலைக் கவனித்து வந்தார் .


★ மகனே! நான் வெளியூர் சென்று மூன்று மாதம் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் நான் திரும்ப வரும் வரை மருத்துவப்பணியை கவனித்துக் கொள்ள வேண்டும் நான் காலமெல்லாம் பணம் பண்ணுவதிலே காலத்தை கழித்து விட்டேன் . ஓய்வு எடுத்துக் கொள்ளவேயில்லை
என்றார் தந்தை . மகன் அதற்கு ஒப்புக்கொண்டான் .


☆ வெளியூர் சென்ற தந்தை மூன்று மாதம் கழித்து திரும்பி வந்தார். மகனைப் பார்த்து தொழில் எப்படி நடக்கிறது என்று கேட்டார்
" நீங்கள் காலமெல்லாம் வைத்தியம் செய்தும் குணப்படுத்த முடியாமல் இருந்த நோயாளிகளை நான் மூன்றே மாதத்தில் சரிப்படுத்தி விட்டேன் " என்றான் மகன்.


★ அதைக் கேட்ட தந்தை அதிர்ந்து போனார்.
" முட்டாளே என்ன காரியம் செய்து விட்டாய் என்னால் அவர்களை குணப்படுத்த முடியவில்லை என்று நினைத்தாயா உன் படிப்புக்கு பணம் எங்கிருந்து வந்தது தெரியுமா நம் வியாபாரமே அந்த நோயாளிகள் நம்பித் தான் ஓடிக்கொண்டிருக்கிறது
உன் தம்பி தங்கை படிப்புக்கான செலவை அவர்களிடமிருந்து கறந்து விடலாம் என்று நம்பி இருந்தேன் நீ அனைத்தையும் குட்டிச்சுவராக்கிவிட்டாயே என்றார்

☆உங்கள் சாமியார் மதகுரு சங்கராச்சாரியார் இமாம் பாதிரியார் அனைவரும் உங்களை நோயாளிகள் ஆக வைத்திருக்கிறார்கள் அதை நம்பித்தான் அவர்கள் தொழில் நடக்கிறது


:ஓஷோ

புத்தகம்
சிவ சூத்திரம்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”