பெண் புத்தி பின் புத்தி - உண்மை உரைத்தாளே!

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பெண் புத்தி பின் புத்தி - உண்மை உரைத்தாளே!

Post by ஆதித்தன் » Tue Jan 05, 2016 5:45 pm

Image
பெண் புத்தி
பின்புலம் புத்தி
அண்டம் ஆக்க
பிண்டம் அழிக்க
புத்தி புத்தி
பிண்டம் அழிக்க
அண்டம் ஆக்க
பின்புலம் புத்தி
பெண் புத்தி

- செல்வ ஆதித்தன் .கு

===========================================================

பெண் புத்தி பின் புத்தி - ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று பழமையான பழமொழிகள் நமது வழக்கமுறையில் உள்ளன.

இதில் காணப்படும் பெண் என்றச் சொல், பெண்ணை குறிப்பதாகவே எல்லோரும் விளக்கம் சொல்கிறார்கள் ... நாமும் அவ்வாறு பெண்ணிற்கே இதனை உவமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், எனது தற்சமய கருத்து அதுவல்ல.

பெண் என்றச் சொல் புத்தியினையே குறிக்கிறது.

பெண் புத்தி பின் புத்தி - பெண் புத்தி, அனைத்திற்கும் பின்புலம் புத்தி என்பதுதான் சரியாக இருக்கும்.

மனதிலிருந்து தோன்றும் கரு ஒவ்வொன்றிற்கும் ஆக்கம் கொடுத்து உருப்பட வைப்பது புத்தி. பெண்ணும் கரு சுமந்து உருப்பட வைப்பதால், புத்திக்கு பெண்ணை உவமைப்படுத்தியுள்ளார்கள்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, என்பதிலும் பெண் என்பதில் புத்தியினையே குறித்துக் கொள்ள வேண்டும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் புத்தி இருக்கிறது. இருவருமே தன் புத்தியினால் தான் அனைத்திற்கும் காரணமாகிறார்கள் என்பதற்கே, ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றுரைக்கப்பட்டது.

=====================================================

[youtube]https://www.youtube.com/watch?v=PhPnms8zJ_c[/youtube]

இதனை உறுதிப்படுத்த, அறிவினைப் பகுத்துத் தேர்ந்த சித்தர்களில் ஒருவரான கொங்கணரின் வாலைக்கும்மிப் பாடல்களைக் கேட்டால் விளங்கும்.

இதில் பெண்ணை எவ்வாறு உவமைப்படுத்துகிறார் என்று நீங்கள் பார்த்தீர்கள் என்றுச் சொன்னால் அனைத்தும், புத்திக்கு அடிப்படையாகவே இருக்கும். உதாரணத்திற்கு, கல்வி, ஞானம், ஆண்டிப்பெண், மூளை இருக்கும் இடமான உச்சந்தலை என பல. ஆக, சித்தர்கள் வணங்கிய வாலைப் பெண், புத்தி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”