நானே கடவுள் ' என்று சிலசமயம் கூறுகிறீர்கள் . உங்களால் ஒரு உயிரினத்தைப் படைக்க முடியுமா ?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

நானே கடவுள் ' என்று சிலசமயம் கூறுகிறீர்கள் . உங்களால் ஒரு உயிரினத்தைப் படைக்க முடியுமா ?

Post by marmayogi » Sat Dec 26, 2015 1:34 am

கேள்வி : - ஜீசஸ்
நானே கடவுள் , நானே
கடவுளின் ஒரே மைந்தன் '
என்று கூறியதுதான் அவரது
உயிருக்கு உலை வைத்தது .
அதைப்போல நீங்களும் ' நானே
கடவுள் ' என்று சிலசமயம்
கூறுகிறீர்கள் . உங்களால் ஒரு
உயிரினத்தைப் படைக்க
முடியுமா ?

ஓஷோ பதில் : -
☆☆☆☆☆☆

★ " தன்னை , தன்
உயிர்த்தன்மையை
அறிந்தவர்களுக்கு , இப்படி
வெளியிடத் தோன்றுவது
இயல்புதான் . அதற்காக , ஒரு
உலகத்தை உண்டாக்குவீர்களா ,
உயிரினங்களை
உண்டாக்குவீர்களா , உடல்
வியாதிகளைத் தீர்ப்பீர்களா
என்று கேள்வி கேட்பது
அறிவீனம் !

★இந்த உலகமே , ஏன் இந்தப்
பிரபஞ்சமே சக்தி மயமானது .
எது சக்தியாக இருக்கிறதோ ,
அதுவே பொருளாக
இருக்கிறது . பொருளை
இயக்குவதும் அந்த சக்திதான் .
உங்கள் உடல் அந்தப் பேரியக்க
சக்தியின் பருப்பொருள்தான் .
அதனுள் புகுந்துகொண்டு
அதை இயக்குவதும் , அதே
சக்திதான் .பொருள் மறைந்து
மூலப்பொருளாகி ,
கடைசியில் அதுவும்
சக்தியாக ஆகிறது . அது ஒரு
இயல்பான , இயற்கையான
மாற்றம் . இந்த மாற்றத்திற்கு
கால அளவு கிடையாது .
எல்லை கிடையாது . இது
நடந்தது , நடக்கிறது , நடக்கும் !
இது ஆதி அந்தம் இல்லாதது .
இதற்குப் பெயர்தான்
கடவுள்தன்மை .
இதை உணர்ந்தவன் ,
புரிந்துகொண்டவன் , தானே
அதுவாக இருப்பதை
உணர்கிறான் .

★ அப்பொழுது '
நானே கடவுள் ' என்று
கூறுகிறான் . இங்கு கடவுள்
என்றால் கடவுள்தன்மை
( Godliness ) என்று பொருள் .
ஆனால் சாதாரண மக்களுக்குச்
சொல்லும்பொழுது அப்படிப்
பெயர்ச்சொல்லாகச்
சொல்லவேண்டி இருக்கிறது .
வேறு வழியில்லை .
அடுத்து இந்த உலகத்தையும்
உயிரினங்களையும் , கடவுள்
அல்லது கர்த்தர் ( Creator ) அல்லது
' அப்பா ' (Father ) படைத்தார்
என்று கிறிஸ்தவம் நம்புகிறது.அதுதான் பிரச்சனையே !
நானே கடவுள் என்று ஜீசஸ்
சொன்னது தவறாகப்
போய்விட்டது . அவர் சற்று
விளக்கமாக ' நானே
கடவுள்தன்மை ' என்று
கூறியிருக்கவேண்டும் .
ஆனால் அவர்
அப்படிச்சொன்னால் . அந்தப்
படிக்காத மீனவர்கள்
புரிந்துகொள்வார்களா ?
சந்தேகம்தான் .
அதைப்போல , ' நான் கடவுளின்
ஒரே மைந்தன் ' என்று ஜீசஸ்
சொன்னார் . இதற்கும் அதே
அர்த்தம்தான் .

★ அதாவது ' நானே
கடவுள்தன்மையால்
விழிப்படைந்தவன் ' என்று
அர்த்தம் . இதுவும் தவறுதலாக
அர்த்தம் பண்ணப்பட்டிருக்கிறது .
அடுத்து இன்னொன்று , '
என்னிடம் வாருங்கள் , நான்
உங்களைக் காப்பாற்றுவேன் '
என்று வேறு
கூறியிருக்கிறார் ஜீசஸ் .
ஆனால் , இதுவும் தவறாக
அர்த்தம் செய்யப்பட்டிருக
்கிறது ! இங்கு 'என்னிடம் '
என்றால் , ' நான் கடவுள்
தன்மையாக இருக்கிறேன் .
அதை நீங்களும் அடைந்தால் ,
நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் '
என்று அர்த்தம் .

★ இப்படிப் பல
வாக்கியங்களை ஜீசஸ்
உருவகமாக மறைமுகமாகச்
சொல்லிவிட்டுச்
சென்றிருக்கிறார் .
அவரையே அவரால்
காப்பாற்றிக்கொள்ள
முடியவில்லையே , உங்களை
எப்படிக் காப்பாற்றுவார் !
சிலுவையில்
அறையப்பட்டபொழுது , ' அப்பா
, என்னைக் கைவிட்டுவிட்டாய
ே ' என்று ஏன் அவர் கதறினார் !
கர்மவினைகளை
அனுபவிப்பதை யாராலும்
தடுக்க முடியாது . செயல்
ஒன்றைச் செய்யும்பொழுது ,
அதன் பலனையும்
அனுபவித்தே ஆகவேண்டும் .

★கடவுள் என்று ஒரு நபர்
இருந்தால் , அவருக்கும் இது
பொருந்தும் ! ஜீசஸ் யூத
சகோதரர்களைப்
பகைத்துக்கொண்டார் . ஆனால்
, அது தவிர்க்க முடியாதது .
அப்படி அவர்களோடு ஒத்துப்
போயிருந்தால் , அவர் ஒரு
ஜீசஸாக இருக்க முடியாது .
நம்மைப்போல ஒரு சாதாரண
மனிதனாகவே இருக்க
முடியும் . அவர் தன்
மனசாட்சிப்படி , தன்
உள்ளுணர்வுப்படி நடந்தார் .
அவரைப்போல நானும்
நடந்தேன் . சாக்ரட்டீஸும் நடந்தார்


★ எங்களுக்கு விஷம்
வைக்கப்பட்டது . ஆனால் அதை
நாங்கள் மனப்பூர்வமாக
ஏற்றுக்கொண்டோம் .
நான்
கிறிஸ்துவப்
பாதிரியார்களை எதிர்த்தேன் .
அவர்கள் செய்யும்
அக்கிரமங்களைச்
சுட்டிக்காட்டினேன் .
அவர்களுடைய அறியாமையை
எடுத்துக் காட்டினேன் .
அவர்களுடைய மதத்
தந்திரங்களை
வெளிச்சம்போட்டுக்
காட்டினேன் .

★அதற்குப்
பரிசுதான் ' தாலியம் ' விஷம் !
இதைப்போலத்தான்
சாக்ரட்டீஸுக்கும் நேர்ந்தது !
சமூகத்தில் புரட்சி செய்பவன்
தன் உயிருக்கு ஒருக்காலும்
பயப்படக்கூடாது .
அப்படிப்
பயந்தால் , அவன் ஒரு
புரட்சியாளனாக இருக்க
முடியாது .
ஆகவே ஜீசஸை
சரியாகப் புரிந்துகொள்ளுங
்கள் . இதை என் கிறிஸ்தவ
சகோதரர்களுக்கு ஒரு அன்பு
வேண்டுகோளாக
வைக்கிறேன் . அவரைத்
தவறாகப் புரிந்துகொண்டு ,
தவறான பாதையில்
செல்லாதீர்கள்.

;- ஓஷோ
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”