தியானப் பாதையில் ஓரளவாவது பயணம் செய்யத் தொடங்காதவரை உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்காது

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

தியானப் பாதையில் ஓரளவாவது பயணம் செய்யத் தொடங்காதவரை உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்காது

Post by marmayogi » Thu Dec 24, 2015 10:05 pm

ஹைமியும் பெக்கி கோல்டுபெர்க்கும் தமது முதல் விமானப்பயணத்தை மேற்கொள்வதற்காக ஒரு விமானத்தில் அமர்ந்து இருக்கிறார்கள்.

ஹைமி தன் சொகுசுச் சாய்வு நாற்காலியில் ஆனந்தமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கொஞ்ச நேரமாக நடைபாதையின் முன்னும் பின்னுமாக வந்து போய்க்கொண்டிருந்த அழகிய பெண்களை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறான்.

அடுத்து அவன் சன்னலின் வழியாக வெளியே பார்க்கிற போது உணர்ச்சி வசப்பட்டு கூறுகிறான்."பெக்கி,அங்கே கீழே நிற்கும் மனிதர்களைப் பார்த்தாயா? அவர்கள் எறும்புகளைப் போல் காணப்படுகிறார்கள்."

பெக்கி சாய்ந்து ஒரு பார்வை பார்க்கிறாள்.பின் கூறுகிறாள்."அவை எறும்புகள் தான் முட்டாளே ! நாம் இன்னும் தரையை விட்டுக் கிளம்பவே இல்லை.!"

விமானத்துக்குள்ளே நடப்பதற்கான பாதையில் போய்வந்து கொண்டிருந்த அழகிய பெண்களை நோட்டமிடுவதிலேயே கண்ணாயிருந்த ஹைமி கோல்டுபெர்க்,விமானம் இன்னும் புறப்பட வில்லை,நின்று கொண்டுதான் இருக்கிறது என்பதை முற்றிலுமாக மறந்து விட்டிருக்கிறான்.

எனவேதான் எறும்புகளைப் பார்த்த போது,அவை மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும்,உயரத்தில் இருந்து பார்ப்பதால் அப்படி....என்று நினைத்து விட்டான்.

பாதையில் ஓரளவாவது பயணம் செய்யத் தொடங்காதவரை உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்காது.தியானம் என்றால் என்ன? என்று மறுபடியும் கேட்பீர்கள்.எனது விளக்கம் மட்டுமே உங்களுக்குப் போதுமானதாகாது.பாதையில் நீங்கள் பயணம் செய்தாக வேண்டும்.

எனவே நீங்கள் தான் கண்களை மூடிக்கொண்டு தியானிக்க வேண்டும்.!

:-ஓஷோ
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”