கடவுள் என்பவர் யார்?.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

கடவுள் என்பவர் யார்?.

Post by marmayogi » Fri Nov 20, 2015 10:59 am

வள்ளலார் காட்டியக் கடவுள்:

★கடவுள் ஒருவரே !

★அவர் அருட்பெருஞ் ஜோதியாக உள்ளார் !

★கடவுள் உருவமாக இல்லை,அருவமாகவும் இல்லை,உரு அருவமாக உள்ளார்.!

★கடவுள் ஒன்றும் இலார், இரண்டும் அலார் ,ஒன்றும் இரண்டு மானார். அன்றும் உள்ளார்..இன்றும் உள்ளார்.என்றும் உள்ளார் தமக்கோர் ஆதியில்லார்,அந்தமில்லார் அவரே அருட்பெருஞ்ஜோதியர் !

★எல்லாம் தானுடையதுவாய் எல்லாம் வல்லதுவாய் ,எல்லாம் தானானதுவாய் எல்லாம் தானலதாய்ச் சொல்லாலும்,பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாததாய் ,அணுவும் செல்லாத நிலைகளினுஞ் செல்லுவதாய் விளங்குவது அருட்பெருஞ்ஜோதி யாகும்.!

★அக்கடவுளுக்கு பாசங்கள் இல்லை,குணங்கள் இல்லை,தத்துவங்கள் இல்லை,மற்றவர் செயற்கை இல்லை,பிறப்பு இல்லை,இறப்பு இல்லை,யாதும் திரிபு இல்லை,களங்கம் இல்லை,தீமை ஒன்றும் செய்பவர் இல்லை,வேண்டுதல் இல்லை,வேண்டாமை இல்லை,மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்பத்தை தருபவர் அவர் அருட்பெரு வெளியில் சிவானந்த சபையில் ஓங்குகின்ற தனிக் கடவுள் அவரே அருட்பெருஞ் ஜோதியர்.!

★எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும்,புறத்தும் நீக்கமற நிறைந்து இருப்பவர உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி என்னும் அருள் நிறைந்த பேரணுவாகும்.

★இயற்கை உண்மையாக இயங்கிக் கொண்டு உள்ளது அருட்பெருஞ்ஜோதி என்னும் ''அணு ''அருள் பேர் ஒளியாகும் ! அது தோற்றம் மாற்றம் இல்லாதது.(அதுவே கடவுள் துகள் ஒளி )


:- வள்ளலார்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”