நான் ஞானம் அடைந்துவிட்டேன் என நினைக்கிறேன் . இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

நான் ஞானம் அடைந்துவிட்டேன் என நினைக்கிறேன் . இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Post by marmayogi » Tue Oct 06, 2015 9:58 am

கேள்வி : -
நான் ஞானம் அடைந்துவிட்டேன் என நினைக்கிறேன் . இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


ஓஷோ ‪‎பதில்‬ : - " எப்பொழுது ஒருவன் ஞானம் அடைந்துவிட்டானோ , அப்பொழுது , தான் ஞானம் அடைந்துவிட்டேன் என்று அவனால் சொல்ல முடியாது ! . அதை அவனால் உணர்ந்து கொள்ளத்தான் முடியும் . அறிந்துகொள்ளத்தான் முடியும் .

எண்ணுதல் என்பது வெறும் யூகம்தான் . ஞானம் அடைந்தவனுக்கு எந்த அத்தாட்சிப் பத்திரமும் பிறரிடமிருந்து தேவையில்லை .
ஆனால் நீங்கள் ஞானம் அடைந்துவிட்டால் , நானே உங்களிடம் வந்து உங்களை ஆசீவதிப்பேன் . நீங்கள் என்னைக் கேட்க அவசியமே இல்லை .
யாருக்கு கண்கள் இருக்கிறதோ , அவர்கள் அதைப் பார்க்கக்கூடும் .
யாருக்கு காதுகள் இருக்கின்றதோ , அதை அவர்கள் கேட்கக்கூடும் .

யாருக்கு இதயம் இருக்கின்றதோ அதை அவர்கள் உணரக்கூடும் .
யாருக்குக் கூர்மையான அறிவு இருக்கிறதோ அவர்கள் அதன் இரகசியங்களைப் புரிந்து கொள்ள முடியும் . "
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”