ஒருபோதும் தோல்வியடைய முடியாது.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஒருபோதும் தோல்வியடைய முடியாது.

Post by marmayogi » Sat Sep 26, 2015 7:54 pm

★கெளதமர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப் படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார்,

★"நான் எங்கு செல்லட்டும்..?" புத்தர் சிரித்தபடி, "நீயே தேர்வு செய்.!"
ஒரு கிராமத்துக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார்.
சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் கேட்டார்,

★"அந்தப் பகுதிக்கா..? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள்.
இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்..?"

★"ஆமாம்!" என்றார் காஷ்யபர்.
"உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்,
அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்..?" என்று கேட்டார் கெளதமர்.

★"மிகவும் மகிழ்ச்சியடைவேன்..,
ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை என்று. அவமரியாதையோடு நிறுத்திக் கொண்டார்களே, என்று நன்றி சொல்வேன்.!"

★"ஒருவேளை அடித்தால் என்ன செய்வாய்..?"
"என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என்று மகிழ்ச்சியடைவேன்."

★"ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்..?'
"மேலும் மகிழ்ச்சியடைவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே..!" என்றார் காஷியபர்.

★"நீ எங்கும் செல்ல முழுத்தகுதி பெற்றவன். நீ போய்வா காஷியபா..!" என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.

★எந்தச் சூழலையும் மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக் கொண்டால், எல்லா சூழலையும் மகிழ்ச்சியாகவே காண முடியும். தோற்பதற்கு தயாராக இருப்பவன் ஒருபோதும் தோல்வியடைய முடியாது. இல்லாவிட்டால் எதிலும் ஏதாவது துக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”