ஜென் கதை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஜென் கதை

Post by marmayogi » Tue Sep 15, 2015 2:31 pm

★ஜென் துறவி ஒருவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்தப்பக்கமாகச் சென்ற வாலிபன் ஒருவன் அவர் முன்னே வந்து நின்றான். ‘ஐயா!’
தியானத்திலிருந்து உலுக்கி எழுப்பப்பட்ட அவர் ‘உனக்கு என்னப்பா வேணும்?’ என்று கேட்டார்.

‘நான் உங்ககிட்டே சிஷ்யனாச் சேர விரும்பறேன்!’

‘எதுக்கு?’

‘நான் கடவுளைப் பார்க்கணும்!’

துறவி சிரித்தபடி எழுந்துகொண்டார்.

’என்னோட வா!’ என்று சொல்லிவிட்டு நடந்தார்.

★சிறிது தொலைவில் நதிக்கரை. தண்ணீரில் இறங்கி நடந்தார் துறவி. இளைஞனும் பின்னால் நடந்தான்.
முழங்கால்வரை ஆழத்தில் இறங்கியபின்னர் துறவி சரேலென்று திரும்பினார். அந்த இளைஞனின் கழுத்தைப் பிடித்துத் தண்ணீருக்குள் அழுத்தினார்.

★அவன் இந்தத் தாக்குதலைக் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. மூச்சுத் திணறிக் கையைக் காலை உதறினான். அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டுத் தப்பிக்க முயன்றான்.
சில விநாடிகளுக்குப்பிறகு துறவி அவனை விடுவித்தார். வெளுத்துப்போய் நிற்கிறவனைப் புன்னகையோடு பார்த்தார்.

★அவன் அலறினான். ’யோவ், நீ என்ன சாமியாரா, சீரியல் கில்லரா? நான் உனக்கு என்னய்யா பாவம் செஞ்சேன்? என்னைப் போய் கொல்லப் பார்த்தியே!’

★ஜென் துறவி அலட்டிக்கொள்ளாமல் கேட்டார். ‘நீ தண்ணிக்குள்ளே இருந்தபோது உனக்கு என்ன தேவைப்பட்டது?’

★‘வேற என்ன? மூச்சுக் காத்துதான்?’
’அந்த நிமிஷத்தில நான் இந்த உலகத்தோட சொத்து சுகங்களையெல்லாம் உன்முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருந்தாலும் நீ ஏறிட்டுப் பார்த்திருப்பியா?’

‘நிச்சயமாப் பார்த்திருக்கமாட்டேன்’ என்றான் அவன். ‘மூச்சு இல்லாம நான் வாழறது எப்படி?’


‘அந்த அளவுக்கு உனக்குக் கடவுளும் அவசியமாத் தோணும்போது என்கிட்ட வா.காட்டறேன்!’
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”