பதற்றம் மனிதனின் இயற்கை.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பதற்றம் மனிதனின் இயற்கை.

Post by marmayogi » Sun Aug 30, 2015 1:42 pm

★எந்த மிருகமும் பதற்றப்பட்டு நான் பார்த்ததில்லை.
உதாரணமாக உங்களுக்கு பயமாக இருக்கிறது...ஒரு சூழ்நிலையில்
தப்பி ஓட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.உங்களால் அப்படிச் செய்ய முடியாது.

★தப்பியோடினால் உங்களைக் கோழை என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் வந்துவிடும்.
ஆனால் விலங்குகள் அப்படிச் செய்வதில்லை.
முதலில் அவை சண்டை போடுவது போல் பாசாங்கு செய்கின்றன.
அதிலே யாருக்குப் பலம் அதிகம் என்று தெரிந்து விடும்.

★அது தெரிந்தவுடன் பலம் குறைந்த விலங்கு ஓடிவிடும்.எதற்காக வெட்டியாகச் சண்டை போட்டுக் காயப்படுவானேன் என்று அவை நினைக்கின்றன.
மனிதர்களை விட புத்திசாலித்தனமாகச் செயல்படுகின்றன.

★எதிரே நிற்கும் நாய் தன்னைவிட பலம் வாய்ந்தது என்று தெரிந்து விட்டால் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடும்.
ஓடிப்போன நாயை யாரும் கோழை என்று சொல்ல மாட்டார்கள்.அது உண்மையில் புத்திசாலி நாய்.
உங்களுக்கு எழும் பயத்தை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதைத் தொடர்ந்து மறுத்துக் கொண்டேயிருக்கிறீர்கள்.
அதுதான் உங்கள் பதற்றத்திற்கு காரணம்.!

★இயற்கையாக எழும் உணர்வைத் தடுக்க முனைந்தால் பதற்றம் வரத்தான் செய்யும்.
இயல்பானவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.இயல்பாக இருக்கப் பாருங்கள்.ஒரு விலங்கைப் போல இருக்கப் பாருங்கள்.

:-ஓஷோ
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: பதற்றம் மனிதனின் இயற்கை.

Post by kavinayagam » Sun Aug 30, 2015 7:17 pm

ஓஷோவின் உண்மையான கூற்று
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”