ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள்.இதை சற்று விளக்க முடியுமா ?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள்.இதை சற்று விளக்க முடியுமா ?

Post by marmayogi » Fri Aug 07, 2015 9:37 am

கேள்வி : - ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள் . இதைச் சற்று விளக்க முடியுமா ?

ஓஷோ ‪‎பதில்‬ : - " ஆம் .

★ இது உண்மைதான் . ஏனெனில் இருவரும் சாதாரண மனநிலையில் , சாதாரண மக்களைப் போல பெரும்பாலும் இருப்பது இல்லை . ஞானி என்பவன் சாதாரண மனதைக் கடந்து மேலே சென்றவன் . பைத்தியம் என்பவன் மனதிற்குக் கீழே சென்றவன் . இதுதான் ஒரே வித்தியாசம் . ஆனால் இதன் பின்விளைவுதான் அசாதாரணமானது .

★ஞானி மனதைக் கடந்து மேலே சென்று பேரானந்த நிலையில் இருக்கிறான் . பைத்தியம் மனதிற்குக் கீழே சென்று ஒருசில எண்ணச் சுழலிலேயே சிக்கித் தவிக்கறான் . மேலே சென்றவன் , எண்ணங்களை ஒதுக்கிச் சென்றிருக்கிறான் . கீழே சென்றவன் மன இறுக்கம் , கவலை , எதிர்பாராத பெருத்த ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து அவனுடைய மனநிலையைப் பாதித்து அவனை கீழே கொண்டு சென்றுவிட்டது .

★ஆனால் இருவரது கண்களையும் பாருங்கள் . அவை ஒன்றுபோலவே ஒருவித வெறுமையில் இருக்கும் . இருவரும் இந்த உலகத்தைப் பற்றி கவலைப்படாமல் எங்கேயோ சஞ்சரித்துக்கொண்டு இருப்பார்கள் . இருவரும் பலசமயம் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வார்கள் ; தானே சிரிப்பார்கள் ! இதனால் கீழை நாட்டில் , அநேக பைத்தியங்களை ஞானிகள் என்று கருதி மக்கள் வழிபடுகிறார்கள் ! இது கிராமத்தில் சகஜம் .

★ஆனால் மேலைநாட்டில் ஒரு ஞானியைக்கூட பைத்தியக்காரன் என்றுதான் எண்ணுவார்கள் . ஜீசஸ் , சாக்ரடீஸ் போன்றவர்களைப் பலர் பைத்தியக்காரன் என்றே கருதிவருகிறார்கள் . பொதுவாக பைத்தியம் ஒரு மிருகம்போல செயல்படும் . மனம் அவன்வசம் ஒருக்காலும் இருக்காது . ஆனால் ஞானியிடம் மனம் ஒரு வேலைக்காரன்போல செயல்படும் . அதைப் பார்த்துத்தான் அவன் சற்று சிரிப்பான் . இவன் வானத்தில் பறப்பவன் . ஆனால் பைத்தியம் பூமிக்கு அடியில் சென்றவன் .

★ஞானி விழிப்புணர்வில் முழுமையாக இருப்பவன் . பைத்தியக்காரன் விழிப்புணர்வின் அதல பாதாளத்தில் இருப்பவன் . ஆனால் வெளிப்பார்வைக்கு இருவருமே ஒன்றுபோலவே காணப்படுவார்கள் . இருவரும் ஆடை மற்றும் உணவு விஷயங்களில் அக்கறை காட்டமாட்டார்கள் . ஏதோ கிடைத்ததை உண்டு வழியில் எங்கேயாவது தன்னை மறந்து கிடப்பார்கள் .

★ஒருவன் ஞானி என்று எப்படி அடையாளம் காண்பது ? அதற்கு உங்கள் உள்ளுணர்வையும் , பகுத்தறிவையும் மேன்மைப்படுத்த வேண்டும் . அப்பொழுது அது உங்களுக்குச் சரியாகச் சுட்டிக்காட்டும் . வேறு வழியில்லை . " .

:-ஓஷோ
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள்.இதை சற்று விளக்க முடியுமா ?

Post by kavinayagam » Fri Aug 07, 2015 8:35 pm

ஞானிகளும் பைத்தியங்களும் ஒரே மாதிரி இருந்தாலும் சற்று வேறுபட்டவர்கள் என்று தாங்களே கூறி விட்டீர்கள் .பின் ஞானிகளும் பைத்தியம் தான் என்று எப்படி கூறலாம்.ஞானிகள் ஒரு விசயத்தில் ஊறி அதை ஆராய்ந்து அதில் மிகத் தெளிவுடன் இருப்பவர்கள் ஆனால் பைத்தியம் அப்படி அல்ல அதே விசயத்தை மனதில் போட்டு குளம்பி குளம்பி ஒரு முடிவுக்கு வரமுடியாதவர்கள். இருவக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள்.இதை சற்று விளக்க முடியுமா ?

Post by marmayogi » Fri Aug 07, 2015 9:14 pm

ஆம் முற்றிலும் உண்மை. ஓஷோ ஞானம் அடைந்த பிறகு அவருக்கு ஏற்பட்ட நிலை. புத்தகத்தின் பெயர் மறைஞானிகளின் சுயசரிதை .

Image

Image

Image

Image
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள்.இதை சற்று விளக்க முடியுமா ?

Post by kavinayagam » Sat Aug 08, 2015 5:23 pm

ஒஷோ மட்டுமா இன்றும் நமக்கு தெரியாமல் பல ஞானிகள் இருக்கிறார்கள்.தன்னை அறிய அறிந்து கொள்ள பலர் முயற்சித்து வருகிறார்கள்.ஆனால் முடியாமல் தவித்துகொண்டிருக்கிறார்கள். இந்த தவிப்பு ஜெயித்துவிட்டால் அவன் ஞானியாகிறான் இல்லையெனில் இந்த தவிப்பே அவனை பைத்தியமாக்கிவிடுகிறது.அவ்வளவுதான்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”