அணிமாதி அல்லது அட்டமாசித்திகள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

அணிமாதி அல்லது அட்டமாசித்திகள்

Post by marmayogi » Wed Aug 05, 2015 11:21 pm

அணிமாதி அல்லது அட்டமாசித்திகள்:

அணிமா:
☆☆☆☆
★அணுவாய்ச் சுருங்கிக் கொள்ளுதல். இந்தவகை சித்து கைவரப் பெற்ற சித்தர்கள் தங்களைப் பிறர் அறியாமல் உலாவுவார்கள். அதாவது அணுவாக தங்கள் உடம்பைச் சுருக்கி பிறர் அறியாவண்ணம்.
உலா வருதல்.

மகிமா:
☆☆☆
★அண்டமாக விரிந்து கொள்ளுதல் இம்முறையில் தன் உடம்பை மலையளவாகவோ, அல்லது அதற்கு மேலாகவோ விரிவடையச் செய்துகொள்வார்கள்.

லகிமா:
☆☆☆☆
★கனமான பொருளை இலகுவாகக் காட்டுதல். கொடுவிலார் பட்டிசித்தர் திருமதி இந்திராகாந்தி
முன் வானில் பறந்தததை லகிமா சித்திக்கு உதாரணமாக கூறலாம்.

கரிமா:
☆☆☆☆
★ இலகுவான பொருளை கனமாகக் காட்டுதல். கொல்லிமலைக் கைகாட்டிசித்தர் தன் உடம்பைச்
சுருக்கி இந்நூலாசிரியரின் வலது கையில் உட்கார்ந்தது இதற்கு உதாரணம்

பிராப்தி:
☆☆☆☆
★தங்கு தடையின்றி எங்கும் சஞ்சரித்தல், ஒரே நேரqத்தில் பல்வேறு இடங்களில் இருத்தல்.
வள்ளல் பெருமானின் பல் இட இருப்பு இதற்குச் சிறந்த உதாரணம்.

வசித்துவம்:
☆☆☆☆☆☆
★உலக உயிர்கள் யாவற்றையும் தன் வசப்படுத்தி அன்பு பாராட்டல். இதன் காரணமாக கொடூரமான
வன விலங்குகளாகிய சிங்கம், புலி போன்றவைக்கூட சித்தர்களுடன் இருக்கும்.இதற்கு உதாரணமாக புலிப்பாணி சித்தர்.கோரக்கசித்தர்.வியாக்ரபாதர் போன்ற சித்தர்கள்.புலிகள் மேல் வலம் வந்ததையும் திபெத்தில் புலிகளுடன் பழகும் லாமாக்கலையும் சொல்லலாம்.

ஈசாத்துவம்:
☆☆☆☆☆
★நெற்றிக்கண்ணை முழுமையாகத் திறப்பதன் மூலம் ஆதிசித்தன் ஆகிய ஈசனின் முழுமையான அனுகிரகத்தை பெறுதல், ஸ்ரீபோகர் ஈசனின் அருள் பெற்று நவபாஷான முருகன் சிலை அமைத்தது இதற்கு சிறந்த உதாரணம்.

பிரகாமியம்:
☆☆☆☆☆
★கூடுவிட்டுக் கூடு பாய்தல். தன்னுடைய உடம்பில் உறையும் உயிரையும் ஆத்மாவையும் எடுத்து வேறொரு உடம்பில்
சொருகி விடுதல் இதற்க்கு உதாரணம் திருமூலர். ஆடு மேய்க்கும்
இடையனின் உடலில் புகுந்ததையும், ஆதி சங்கரர் மன்னர் ஒருவர் உடலில் புகுந்து சிற்றின்பம் துய்த்ததையும் கூறலாம்.
சத்குரு போகமுனிவரின் வான்வழிப் பயணமும் இதில் அடங்கும்.

வாழ்க வளமுடன்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”