விழிப்புணர்வு(awareness)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

விழிப்புணர்வு(awareness)

Post by marmayogi » Sun Aug 02, 2015 6:24 am

★மக்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள். அதில் இருந்து விடுபட இரண்டு வழிகள்தான்
உள்ளன. அவர்கள் தியானம் செய்பவர்களாக, உஷாரானவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக,
தன்னுணர்வு பெற்றவர்களாக ஆக வேண்டும் .

★ஆனால், அதற்கு தைரியம் தேவை.
அல்லது இன்னொரு மலிவான வழி என்னவென்றால், நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ, அதைவிட இன்னும் அதிகமான
தன்னுணர்வு இழந்த நிலைக்கு நீங்கள்
சென்றுவிட்டு, அந்த நிலையில் நீங்கள் அந்த துன்பத்தை உணராமல் இருக்க முடியும்.

★உங்களை முற்றிலும் புலன்நுகர்ச்சி அற்றவர்களாக ஆக்குகின்ற ஒரே ஒரு பொருளை, ஏதோ ஒரு
மயக்க மருந்தை, ஏதோ ஒரு வலி நிவாரணியை எடுத்துக் கொள்வதால், அது உங்களை தன்னுணர்வு
இழந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடுவதால்,
நீங்கள் அந்த தன்னுணர்வு அற்ற நிலையில்
உங்களது கோபம், துன்பம், அர்த்தமற்ற தன்மை இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

★இந்த இரண்டாவது வழி, உண்மையான வழி அல்ல.
இந்த இரண்டாம் வழி, உங்களது துன்பத்தை
கொஞ்சம் சௌகரியமானதாகவும், கொஞ்சம் தாங்கக்கூடியதாகவும், கொஞ்சம் வசதியானதாகவும்
மட்டுமே ஆக்கக் கூடியது.
ஆனால் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்காது.
இது, உங்களை மாற்றியமைக்காது. உங்களுக்குள் மாற்றம் ஏற்படவேண்டுமென்றால், அது தியானத்தால் மட்டுமே முடியும்.

★ஏனெனில் தியானம் ஒன்றுதான்உங்களை விழிப்புணர்வு உள்ளவர்களாக ஆக்குகின்ற வழி.
என்னைப் பொருத்தவரையில்,தியானம் ஒன்று மட்டுமே உண்மையான மதமாகும். மற்றவையெல்லாம் ஏமாற்று வித்தை.
மேலும்,கிறிஸ்துவம், இந்து, முகமதியர், சமணம், பௌத்தம் என வெவ்வேறு பெயர்களில் அபின்
உள்ளது.

★ஆனால் அவைகள், வெறும் தொழிற் சின்னங்கள் மட்டுமே. பாத்திரங்கள் தான் வேறு வேறானவை.
ஆனால் அவற்றில் உள்ள பொருட்கள் ஒன்றுதான். அவைகள் எல்லாம்,
நீங்கள் உங்கள் துன்பத்தில் எப்படியோ உங்களை சரி செய்து கொண்டு செல்கின்றதொரு வழிக்கு
உதவுகின்றன.

★இங்கு, என்னுடைய முயற்சி என்னவென்றால், உங்களை இந்த துன்பத்தைக் கடந்து அதற்கு
அப்பால் கொண்டு செல்வதுதான்.
நீங்கள் துன்பத்தை நீங்கள் விரும்பிய வகையில் மாற்றி
அமைத்துக் கொள்ள மட்டுமே முடியும் என்பது கிடையாது.
நீங்கள் இந்ததுன்பத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெறுகின்ற ஒரு சாத்தியம் உள்ளது.

★ஆனால்,அந்தப் பாதை கொஞ்சம் கடினமானது. ஆனால் அந்தப் பாதை சவாலானது.
அதில் நீங்கள், உங்களது உடல் குறித்த விழிப்புணர்வுடன் மட்டுமல்ல; நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

:→ஓஷோ
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”