ஒரு ஜென் கதை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஒரு ஜென் கதை

Post by marmayogi » Wed Jul 29, 2015 6:37 am

ஒரு ஜென் கதை
☆☆☆☆☆☆☆

★இரண்டு இளம் துறவிகள். தியானத்தில் அமர்ந்திருந்தார்கள்.
ஒருவர் சொன்னார். ‘நான் நானாக இல்லை. வாழ்வோடு முழுக்கக் கலந்துவிட்டேன். இதுதான் ஜென் நிலை!’

★இரண்டாவது துறவி கேட்டார். ‘எப்படிச் சொல்கிறாய்?’

★‘ஆற்றில் மரக்கட்டை மிதக்கிறது, பார்த்திருக்கிறாயா?’

★‘ஆமாம். அதற்கென்ன?’

★‘அந்த மரக்கட்டை நீரோட்டத்தை எதிர்த்துப் போரிடுவதில்லை. அதன் போக்கில் இதுவும் செல்கிறது. அதுபோல, நானும் என்னுடைய தனிப்பட்ட உணர்வை இழந்துவிட்டேன், எதையும் எதிர்ப்பதில்லை, முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன், எந்த முனைப்பும் எதிர்பார்ப்பும் இல்லாதபடி வாழ்க்கையின் நீரோட்டத்தில் மிதந்து செல்கிறேன்!’

★இரண்டாவது துறவி சிரித்தார். ‘அப்படிப் பார்த்தால் நான்தான் உன்னைவிட அதிகம் ஜென்னில் கலந்திருக்கிறேன்!’

★‘எப்படி?’
‘தண்ணீரில் பனிக்கட்டி மிதக்கிறது, பார்த்திருக்கிறாயா?’

★‘ஆமாம். அதற்கென்ன?’

★‘அந்தப் பனிக்கட்டியையும் தண்ணீரையும் பிரித்துச் சொல்லமுடியாது. இரண்டும் ஒன்றாகக் கலந்துவிட்ட நிலைமை. அதேபோல், நானும் என்னுடைய உணர்வை இழந்து வாழ்க்கையின் நீரோட்டத்தில் பனிக்கட்டியாக மிதக்கிறேன்!’

★இவர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டே அவர்களுடைய குருநாதர் வந்தார். ‘முட்டாள்களே, நீங்கள் இருவரும் இன்னும் ஜென்னைப் புரிந்துகொள்ளவில்லை’ என்றார்.

★‘என்ன சொல்கிறீர்கள் குருவே?’

★‘தண்ணீரில் மரக்கட்டையாகவோ, பனிக்கட்டியாகவோ மிதப்பது ஜென் அல்ல. அந்தத் தண்ணீராகவே ஆகிவிடுவதுதான்!’ என்றார் குருநாதர். ‘நீங்கள் இருவருமே அந்த நிலையை இன்னும் எட்டவில்லை. வெட்டி பந்தாவை விடுங்கள்.

:-ரஜினீஷ் ஓஷோ
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”