சமாதி என்றால் என்ன ?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

சமாதி என்றால் என்ன ?

Post by marmayogi » Sat Jul 25, 2015 10:00 pm

சமாதி என்றால் என்ன ?
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

★சமம் + ஆதி = சம ஆதி = சமாதி.
அதாவது நாம் ஆதியில் இருந்த நிலைக்குப் போவது
ஆதியில் நாம் இருந்த இடம் நம் தாயின் கருவறை.

★அங்கு நாம் மூச்சுக் காற்றை சுவாசிக்க வில்லை
காற்றை சுவாசிக்காவிட்டாலும் நம் அவயவங்கள் இயங்கின.
நாம் வெளிவிடும் மூச்சுக் காற்று பன்னிரு மற்றும் எட்டு அங்குலத்தில் இருந்து சுருக்கிக் கொண்டே வந்து முக்கின் வழி மூச்சுக் காற்று ஒரு அங்குலத்துக்குள் ஓடுமாறு செய்ய வேண்டும் .

★ பின்பு கண்டத்திற்குள் ஓடுமாறு செய்ய வேண்டும் ,. அப்போது அந்த மூச்சானது தானாகவே சென்று ஓரிடத்தில் அடங்கி விடும் ,. அடங்காமல் சில சமயம் கண்டத்திற்கும் மூக்கின் நுனியிலும் ஓடிக் கொண்டு இருக்கும் ,. அப்போது நாபிக்கும் கண்டத்திற்கும் மாறி மாறி ஒட்டிக்கொண்டு இருந்தால் வெளி வராமல் ஒடுங்கி விடும் ,.

★ ஆனால் நம் உள் அவயவங்கள் எப்போதும் போல் இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த நிலையை சமாதி நிலை என்பர் . வெளி உலகம் நமது கண்ணில் படாது ,. கண் அனேகமாக மூடி இருக்கும் , வெளி உலகத் தொடர்பு இல்லாத இந்த சமாதி நிலை நாம் பிறப்பதற்கு முன்பு வெளி உலகத்தை பார்க்காத நிலைக்கு ஒப்பானதாகும்
சமாதி நிலைதான் ஞானத்திற்கு முதல் படி அல்லது முன்னோடி ஆகும்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: சமாதி என்றால் என்ன ?

Post by சாந்தி » Sun Jul 26, 2015 7:30 am

Great explanation...
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சமாதி என்றால் என்ன ?

Post by marmayogi » Sun Jul 26, 2015 10:23 am

நன்றி மேடம். :thanks: . வாழ்க வளமுடன்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”