ஜென் கதை(புகழ் இல்லாமல் வாழ்வதே சிறப்பு)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஜென் கதை(புகழ் இல்லாமல் வாழ்வதே சிறப்பு)

Post by marmayogi » Fri Jul 24, 2015 5:21 pm

ஜென் கதை


★ஜென் மாஸ்டர் ஒருவர். ஊர் ஊராகச் சென்று போதனை செய்வார். மக்கள் தருகிற உணவைச் சாப்பிடுவார். என்றைக்காவது சாப்பிட ஏதும் கிடைக்காவிட்டால் பட்டினியாகப் படுத்துவிடுவார்.

★ஒருநாள், பெரிய பணக்காரர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். ‘ஐயா, உங்களைமாதிரி பெரிய ஞானி ஏன் இப்படி நாடோடிமாதிரி அலையவேண்டும்?’ என்றார்.

★‘உங்களுக்கு நான் ஒரு பிரமாதமான ஆசிரமம் அமைத்துத் தருகிறேன். நீங்கள் அங்கேயே தங்கியிருந்து உங்களுடிய தியானங்களைத் தொடரலாம். நாடுமுழுவதிலும் இருந்து மக்கள் உங்களைத் தேடி வந்து பாடம் கற்றுக்கொள்வார்கள். என்ன சொல்கிறீர்கள்?’

★ஜென் மாஸ்டர் சிரித்தார். ‘அது எனக்குச் சரிப்படாது. மன்னித்துவிடுங்கள்’ என்றார்.

★’ஏன் ஐயா அப்படிச் சொல்கிறீர்கள்? நான் கேட்டதில் ஏதாவது தவறா? உங்களுடைய புகழ் நாடுமுழுவதும் பரவவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.’

★‘உங்கள் எண்ணத்தில் தவறில்லை. ஓர் ஊதுபத்தியை ஏற்றிவைத்தால் அறைமுழுவதும் நறுமணம் கமழ்கிறது. ஆனால் கொஞ்சநேரம் கழித்து அந்த ஊதுபத்தியே காணாமல் போய்விடுகிறது. அப்படிச் சுயத்தை இழந்து புகழ் பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்?’ என்றார் அந்த மாஸ்டர்.

★‘பணம், புகழ், பதவி, மரியாதை போன்ற விஷயங்கள் கத்தியை நக்கித் தேன் குடிப்பதுபோல, அந்த ருசிக்கு ஆசைப்பட்டால், நாக்கு போய்விடும்! எனக்கு ஆற்றில் ஏந்திக் குடிக்கிற பச்சைத் தண்ணீர் போதும்.’
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”