ஜென் கதை(zen)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஜென் கதை(zen)

Post by marmayogi » Mon Jul 20, 2015 10:18 pm

ஜென் கதை
●●●●●●●●

★கல்லூரியில் ஜென் வகுப்பு. ப்ரொஃபஸர் சுவாரஸ்யமாகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ‘பு ஜி-ன்னா என்ன தெரியுமா?’

★‘புஜ்ஜி-ன்னா தெரியும் சார்’ என்றான் ஒரு குறும்புப் பையன். ‘எங்கம்மா என்னை அப்படிதான் கொஞ்சுவாங்க!’
ப்ரொஃபஸர் கோபப்படவில்லை. ‘புஜ்ஜி இல்லை, பு ஜி’ என்றார். ‘ஜென் மாஸ்டர் ரின்ஜாய் அடிக்கடி சொல்லிப் பிரபலப்படுத்தின வார்த்தை இது, அப்டீன்னா, செயல் எதுவும் இல்லாத வெற்றிடம்-ன்னு அர்த்தம்!’

★‘வெட்டியா உட்கார்ந்திருக்கறது, அப்படிதானே சார்?’ யாரோ பின் வரிசையிலிருந்து இப்படிக் கேட்டதும் வகுப்பில் சிரிப்பலை.

★’இல்லை’ என்றார் ப்ரொஃபஸர். ‘ஜென் தத்துவம் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கறதில்லை, இயற்கையோட போக்குல நம்மோட செயலைக் கலந்துடச் சொல்லுது, அப்போ அந்தச் செயல் தனியாத் துருத்திகிட்டுத் தெரியாது. அதான் பு ஜி!’

★‘அது எப்படி சார் முடியும்?’ என்றான் ஒரு பையன். ‘மத்த ஜென் தத்துவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது, ஆனா இந்த பு ஜி எதார்த்தத்தில சாத்தியமே இல்லை-ன்னு நினைக்கறேன். நாம எதைச் செஞ்சாலும் அதைச் செய்யறோம்-ங்கற உணர்வு நமக்குள்ள இருந்துகிட்டுதானே இருக்கும், அதை மறக்கடிக்கறது எப்படி?’

★‘நாமே வலிய உட்கார்ந்து அதை மறக்க முயற்சி பண்ணினா சிரமம், ஆனா அந்த எண்ணமே நமக்கு வராதபடி தடுத்துட்டா சுலபம்’ என்றார் ப்ரொஃபஸர்.
’அதான் எப்படி?’

★‘நீ எப்படி நடக்கறே? எப்படி மூச்சு விடறே? அதைப்பத்தியெல்லாம் என்னிக்காவது யோசிச்சதுண்டா? அதுபாட்டுக்குத் தானா ஆட்டோபைலட்ல நடக்குது. இல்லையா?’
‘அ-ஆமா!’

★’அதைத்தான் பு ஜி-ன்னு சொல்றார் ரின்ஜாய்’ என்று முடித்தார் ப்ரொஃபஸர். ‘சுவாசம்மாதிரி, நடைமாதிரி, கை அசைவுகள் மாதிரி நம்மோட ஒவ்வொரு செயலும் இயற்கையோட ஒன்றிப்போயிடணும், அதைச் செஞ்சுகிட்டிருக்கோம்-ங்கற நினைப்பே எழக்கூடாது. அதுதான் பர்ஃபெக்ட் ஜென் வாழ்க்கை!’
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”