புத்தருக்கு அவமானம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

புத்தருக்கு அவமானம்

Post by marmayogi » Fri Jul 10, 2015 8:47 am

புத்தருக்கு அவமானம் :
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓

★ஒரு கிராமத்தின் வழியாக புத்தர் சென்றபோது அவ்வூர் மக்கள் அவரை அவமதித்தார்கள். மிகவும் மோசமாக ஏசினார்கள்.அவற்றையெல்லாம் அமைதியாக கேட்டார், பிறகு, “ நீங்கள் இன்னும் ஏதாவது கூற விரும்புகிறிர்களா ?

★ஏனென்றால் அடுத்த கிராமத்திற்கு நான் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும். அங்கு எனக்காகப் பலர் காத்திருப்பார்கள்.

★தாங்கள் இன்னும் ஏதேனும் சொல்ல விரும்பினால் இவ்வழியே நான் வரும்போது நேரம் ஒதுக்குகிறேன்.அப்போது நீங்கள் வந்து சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லுங்கள்” என்றார்.

★அவ்வூர் மக்கள் ஆச்சரியமடந்தனர் ” நாங்கள் ஏதோ ஒன்றை உங்களிடம் சொல்லவில்லை. உங்களை அவமானப்படுத்திக் கொண்டல்லவா இருக்கிறோம்? “ என்றனர்.

★புத்தர் சிரித்தார். “ அப்படியா! என்னை அவமானப்படுத்த நீங்கள் கொஞ்ச காலம் தாழ்த்தி வந்துவிட்டீர்கள், குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கவேண்டும் ! இப்போது நான் அந்த அளவுக்கு முட்டாள் இல்லை ! நீங்கள் என்னை அவமானப்படுத்துங்கள். அது உங்களுக்குள்ள சுதந்திரம், ஆனால் அதை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் எனது சுதந்திரம். இப்போது அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை ! ” என்றார்.

★அவர் மேலும் கூறினார் “ உங்களது கிராமத்திற்கு வருவதற்கு முன்பு ஒரு கிரமத்தைக் கடந்து வந்தேன் அங்கிருந்த மக்கள் எனக்குத் தருவதற்காக இனிப்புகள் கொண்டுவந்தனர் நான் அவர்களுக்கு நன்றி கூறினேன் அவர்களிடம் நான் இனிப்பு உண்பதில்லை எனவே எனக்கு இனிப்புகள் வேண்டாம் என்று கூறினேன் எனவே அந்த இனிப்புகளை அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? “ என்று கேட்டார்.

★அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர் “அவர்கள் அதனை திருப்பி வீட்டிற்கு எடுத்துச்சென்றிருப்பார்கள்” என்றார் .

★உடனே புத்தர் “ இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? எனக்கு ஏற்படுத்திய அவமானங்களை இப்போது நீங்களும் திரும்ப வீட்டிற்கு எடுத்து செல்லவேண்டியது தான்.

★நான் உங்களது அவமதித்தலை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியில்லை.” என்று கூறினார்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”