பூஜ்யமும் - பூஜ்யரும்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பூஜ்யமும் - பூஜ்யரும்

Post by marmayogi » Sat Jun 27, 2015 9:15 pm

Image
பூஜ்யமும் - பூஜ்யரும்
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
.
★"பூஜ்யம் தான் முழுமையான எண், மற்ற எண்களுக்கு மதிப்பு வைத்திருக்கிறோம். பூஜ்யத்திற்கு மதிப்பு ஒன்றுமில்லை என நினைக்கிறோம். ஆனால், அதுவா ஒன்றுமில்லை?. 1 என்ற எண்ணிணை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜ்ஜியத்திற்குப் பின்னால் இந்த 1ஐ வையுங்கள். இப்போது அதன் மதிப்பு 10. பூஜ்ஜியமோ ஒன்றுமில்லை.

★ஒன்றுமிலாததை மதித்து அதற்குப் பின்னால் 1ஐ வைத்தால், அதன் மதிப்பு பத்தாகிவிட்டது. பூஜ்யத்திற்கு ஒன்றுமே இல்லாத போதும் பூஜ்யத்தை அலட்சியப்படுத்தி 1ஐ முன்னாள் போட்டால் 1 இன் மதிப்பு பத்தில் ஒன்று [0.1]

★அது போன்று இறைவன் நிறைவானவன். தனக்கென்று தனி மதிப்பு இல்லாதவன். யார் அவனைச் சேர்ந்தார்களோ, அவர்களுடைய மதிப்பை உயர்த்தக் கூடியவன். யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள்.

★இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள். இறைநிலையை உணர்ந்து அதை மதிப்பவர்களைப் பூஜ்யர் என்பார்கள்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”