அவரவர் துன்பத்திற்கு அவரவரே காரணம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

அவரவர் துன்பத்திற்கு அவரவரே காரணம்

Post by marmayogi » Sat Jun 20, 2015 12:05 pm

Image
அவரவர் துன்பத்திற்கு அவரவரே காரணம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
★வினா : நம் வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கு நாமே காரணமாக எப்படி இருக்க முடியும்?

★விடை : உங்களுக்குத் துன்பம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங் கள். உங்கள் நினைப்பில் தான் துன்பம் இருக்கிறது. உண்மை யில் அது துன்பமே இல்லை. உங்களுக்கு 85 வயது என்றும் உங்கள் அப்பாவுக்கு 110 வயது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அவர் இறந்து விட்டார். நீங்கள் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். உண்மையில் அது துன்பமா? இன்னும் இருந்தால் இரண்டுபேருக்குமே துன்பமாக இருக்கும். இம்மாதிரி எத்தனையோ இன்பத்தைத் துன்பமாக நினைக்கிறோம்.

★அதிகமாகச் சாப்பிட்டால் துன்பம் வரும் என்பது தெரியுமே. ஆனால், சாப்பிடும் போது இன்பமாக இருக்கிறதே. அளவோடு யார் நிற்கிறார்கள்? அஜீரணம் வருகிறது. எனக்கு இவ்வளவு சொத்து இருந்தால் தான் இன்பம் என்று நினைக்கிறார்கள். அப்படி எதிர்பார்க்கும்போது கிடைக்கவில்லை என் றால் வருத்தப்படுகிறார்கள். உண்மையில் அது கிடைத்துத்தான் வாழ வேண்டும் என்பதில்லை. ஆனாலும் கூட எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள். யார் மேல் குற்றம்?

அருள் தந்தை - VETHATHIRI MAHARISHI
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”