எண்ணத்தில் கவனமாய் இருங்கள்,

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்,

Post by marmayogi » Sat Jun 13, 2015 5:35 pm

Image
★"ஒரு எண்ணத்தை, ஒரு தடவை எண்ணிவிட்டோம் என்றால்,நாம் நினைக்காமலே மீண்டும் மீண்டும் அதே எண்ணம்எழுந்து, எழுந்து அடங்கும். இவ்வாறு பல தடவை எழும்போது,அந்த எண்ணமானது ஒவ்வொரு தடவையும் வலுப்பட்டுச்செயலைச் செய்வதற்கு உடல் செல்களையும் தூண்டிவிடும்.ஆகவே எண்ணத்திற்கும் அளவு வேண்டும்.".-

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

"ஐயா, சூழ்நிலை காரணமாக நமக்குச் சினம் வரும்படி நண்பர்கள் தூண்டும் பொழுது, நாம் மனதை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?"

.மகரிஷியின் பதில் :

"நம் மனதில் முன்னதாகவே ஒரு ஒத்திகை (Rehersal) செய்து கொள்ள வேண்டும். "அவர்களோ அறியாதவர்கள், பயிற்சி செய்யாதவர்கள், அவர்கள் என்ன கூறினாலும், எவ்வாறு சினமூட்டினாலும்நான் சினப்படாமல், எதிர்த்துக் கூறாமல்,'என் வினைப் பதிவுதான் கழிகிறது'என்று மனதால் ஏற்றுக்கொண்டு, அவர்களை வாழ்த்துவேன்." என்ற தீர்மானத்தை மனதில் ஆழமாக, உறுதியாக வைத்துக் கொண்டால், யார் என்ன கூறினாலும் அதைப்பற்றி மனம் வருந்த வேண்டிய அவசியமே வராது.".-

வேதாத்திரி மகரிஷி.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: எண்ணத்தில் கவனமாய் இருங்கள்,

Post by marmayogi » Mon Sep 14, 2015 8:27 pm

மனதைக் கொண்டே
நாம் யார் என்று
பார்த்தோமானால்,
மனமே தான்
நாமாக இருக்கிறது
என வரும்.
மனம் நம்மை
உயர்த்தும், தாழ்த்தும்
எனத் தெரிய வரும்.
நாம் மனதை
உயர்த்தலாம், தாழ்த்தலாம்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”