நீ யார்?" என்று கேட்டுத் தான் பழக்கம்!

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

நீ யார்?" என்று கேட்டுத் தான் பழக்கம்!

Post by marmayogi » Wed Jun 10, 2015 5:07 am

நீ யார்?" என்று கேட்டுத் தான் பழக்கம்!
எப்பொழுதாவது "நான் யார்?" என்று
கேட்டுக் கொள்கிறோமா ! ?. "

★"இது நாள் வரையில் நமக்கெல்லாம் எப்போதுமே யாராகிலும் நம்மை நோக்கி சிறிது ஏதாவதுச் சொன்னால், "நீ யார்?" என்று கேட்டுத் தான் பழக்கம் ! எப்பொழுதாவது "நான் யார்?" என்று கேட்டுக் கொள்கிறோமோ என்றால் கிடையாது. எனவே முதல் முறையாக இன்று "நான் யார்?" எனக் கேட்பது புதுமையாகத் தான் இருக்கும்.

★அந்தப் புதுமைதான் மனிதனை மனிதனாக்க வல்லது. "நீ யார்?" என்று கேட்கையில் வெறுப்புணர்ச்சிதான் மேலோங்கி நிற்கும். அது மனம் விரைவாக (புறத்தே) இயங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிவயப்பட்ட நிலை.

.★"நான் யார்?" என்று கேட்கும்போது "என்னை இந்த உலகிற்கு அனுப்பியவர் யார்? இந்த உலகத்தை நிர்வகித்துக் கொண்டிருப்பது யார்? நான் எங்கிருந்து வந்தேன்? எங்குப் போகவேண்டும்? அது எப்பேர்ப்பட்ட இடம்?," என்றெல்லாம் எண்ணி அந்த எண்ணத்திலே, ஒரு எல்லைகாண, ஒரு எல்லை வகுத்துக் கொள்ளக்கூடிய கேள்விதான் "நான் யார்?" என்பது.

.★"நான் யார்?" என்பது இரண்டே வார்த்தைகள் கொண்ட கேள்விதான். இரண்டே இரண்டு சொற்கள் தான். இந்த இரண்டு சொற்கள் கொண்ட ஒரு கேள்வியிலே, அதற்கு அர்த்தம் மாத்திரம் புரிந்து கொண்டுவிட்டால், இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியம் அத்தனையும் விளங்கிவிடும்.

.- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”