ஒருவர் ஞானம் அடைந்ததற்கு அடையாளம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஒருவர் ஞானம் அடைந்ததற்கு அடையாளம்

Post by marmayogi » Thu May 14, 2015 2:26 am

ஒருவர் ஞானம் அடைந்ததற்கு அடையாளம்:-
★★★★★★★★★★★★★★★★★
Image

◆●◆ஒருவர் ஞானம் அடைந்ததற்கு அறிகுறி உச்சியில் ஆயிரம் இதழ் தாமரை விரியும். மூளை செல்களில் இந்த மாற்றம் நிகழும்.இதை நிரூபிக்க முடியாது. இது ஒரு அணு வெடிப்பு போல தானகவே ஒவ்வொரு மனிதனுக்கும் நிகழும்.
இந்த நிலை வரும்போது இன்பமும் இருக்காது , துன்பமும் இருக்காது . விருப்பும் இருக்காது, வெறுப்பும் இருக்காது. விருப்பும் வெறுப்பும் அற்ற நடுநிலை பண்பு இருக்கும். அவரே உண்மையான ஞானி.

◆●◆இது எப்பொழுது நடக்கும் என்று கணிக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.தவத்தின் போது மனம் இயங்காது . தியானத்தின் போது மனம் இயங்கும். இதுவே தவத்திற்கு தியானத்திற்கும் உள்ள வித்தியாசம்.

Image

◆●◆இந்த நொடியில் கூட ஞானம் வரலாம். ஞானம் மலர்ந்துவிட்டால். நாம் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே நிமிடத்தில் விடை கிடைத்துவிடும். நான் யார் என்ற கேள்விக்கு ஒரே நொடியில் விடை கிடைத்துவிடும். பேச வாய் வராது. வாய் அடைத்து போகும். உண்மையை அறிந்தவர் யாரும் வாயை திறப்பதில்லை. அது நிகழ்ந்துவிட்டால் கடவுள் பேசுவதும் நாம் பேசுவதும் ஒன்றாகிவிடும். நான் கடவுள் என்ற நிலைக்கு சென்றுவிடுவோம்.

◆●◆ஞானம் அடைந்தவர்கள் நம்மை போலவே சாதாரணமாக இருப்பார்கள். ஞானம் அடைந்ததை வெளியில் காட்டிகொள்ள மாட்டார்கள்

''ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்''
:-பத்ரகிரியார்

''இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன் என் கோவே - துன்று மல வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்''
:- வள்ளலார்



ஞானம் அடையவில்லையெனில் என்ன நிகழும்?
★★★★★★★★★★★★★★★★★
Image

◆●◆மரணம் இயற்கையாக வரும் போது மறுபிறவி தொடரும். ஒரு முடிவு இருக்காது. இன்பமோ அல்லது துன்பமோ ஒரு மனிதனை ஆட்டி படைக்கும். நாமாகவே வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை மூலமாக உயிரை உடம்பில் இருந்து பிரிக்கும் போது இயற்கைக்கு முரணான செயலாக மாரும்.

◆●◆ கடவுள் நீதிக்கு முரணாக உயிரை பிரித்தால் வேறு உடல் கிடைக்காமல் ஆன்மாவாக இந்த உலகிலேயே சுற்றி கொண்டு இருப்போம். வேறு தேகம் கிடைக்க பல ஆண்டுகள் காத்து கிடக்க வேண்டும்.

◆●◆அப்படியே வேறு தேகம் கிடைத்தாலும் திரும்ப இன்பம் துன்பம் வருமே!!. திரும்ப பள்ளி செல்ல வேண்டும். ஆசிரியரிடம் அடி வாங்க வேண்டும். நிறைய தேர்வு எழுத வேண்டும். இது எல்லாம் நமக்கு தேவையா!! என்று ஒரு வினாடி சிந்தித்து பார்த்தால் தன்னை உணரும் தத்துவம் புரியும்.

◆●◆மனித பிறவி கிடைத்தால் ஓகே. மனித பிறவி கிடைக்காமல் விலங்காக பிறந்துவிட்டால் ஒவ்வொரு வினாடியும் மற்ற விலங்குகள் தாக்கிவிடுமோ என்று பயந்து பயந்து உயிர் வாழ வேண்டும். எந்த நேரத்தில் உயிர் போகும் என்று கணிக்க முடியாது.

◆●◆உதாரணமாக ஒரு பசு மாடாக பிறந்தால் இரவு நேரத்தில் கொசு கடித்து துன்புருத்தும். ஆயிரக்கணக்கான கொசு ஒரு இரவி பசுவின் ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும். பசு துன்பத்தை அனுபவிக்க மட்டுமே முடியும். சுயமாக சிந்தித்து துன்பத்தில் இருந்து விடுபட முடியாது. ஏனெனில் ஓரறிவு முதல் ஐந்து அறிவு உயிர்கள் அனைத்தும் விதிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது. விதியை மீறிக்கொண்டு எந்த செயலையும் செய்ய முடியாது. ஆனால் மனிதன் என்பவன் விதியை வெல்லும் ஆற்றல் பெற்றவன்.

◆●◆மனிதன் வித விதமாக உணவினை உண்கின்றான். ஆனால் விலங்குகள் வித விதமாக சாப்பிட முடியுமா!!!. எனக்கு நூடல்ஸ் வேண்டும் என்று எந்த விலங்காவது கேட்டது உண்டா?. வாய் பேச தெரிந்தால் கேட்கும். இறைநிலை ஐந்து அறிவு உயிர்களுக்கு எந்த சுதந்திரத்தையும் கொடுக்கவில்லை. விதித்தபடி வாழ்ந்தே ஆகவேண்டும். ஆனால் மனிதனுக்கு மட்டுமே எல்லா உரிமையும் கொடுத்துள்ளார். அதை மனிதன் உணர்வது எப்போது?. வித விதமாக சாப்பிடுகிறான். புதிது புதிதாக ஆடை அணிகின்றான். நினைத்த நேரத்தில் எங்கேயும் பயணம் செய்கிறான். டிசைன் டிடைனாக வீடுகள் கட்டுகிறான். இதை எல்லாம் ஒரு விலங்கு செய்ய முடியுமா?.


◆●◆மனிதன் மட்டுமே special. அதை மனிதன் உணர்வதே இல்லை. வெந்ததை தின்றுவிட்டு விதி வந்தால் இறக்கிறான். இந்த இறப்பு பிறப்பு என்பது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இதை வெல்ல ஒரே வழி ஞானம் அடைவது மட்டுமே. மனிதன் கடவுள் ஆகலாம். கட+உள்= கடவுள்.இதை ஒரு மனிதன் புரிந்து கொண்டால் கடவுளை வெளியில் தேடுவதை விட்டுவிட்டு தனக்குள் கடவுளை தேடுவான்.

◆●◆பல கோடி ஆன்மாக்கள் பூமியில் மனித கண்களுக்கு புலப்படாமல் சூக்கும தேகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அதை இந்த சாதரண புற கண்களால் பார்க்க முடியாது. அதற்கு என்று ஒரு கண் இருக்கிறது. அதற்கு பெயர் அககண். அது தியானத்தின் போது மட்டுமே விழிப்பு விலையில் இருக்கும். ஐந்து புலன்களை ஒடுக்கி உயிரின் மீது மனதை வைத்து தியானம் செய்யும் போது அககண் திறக்கும். அககண் திறந்தால் சூக்குமகமாக வாழும் உயிர்களோடு பேச முடியும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”