கடைசியில் மனித வாழ்க்கை இது தானா!!!!

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

கடைசியில் மனித வாழ்க்கை இது தானா!!!!

Post by marmayogi » Sat May 09, 2015 10:56 pm

Image

★முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.
:
பட்டினத்தார்.

"காது அறுந்துபோன தையல் ஊசி கூட ஒருவரின் மரணத்தறுவாயில் அவருடன் வராது"

★காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!!! என்று பட்டினத்தார் அரசனாக இருந்து கடைசியில் துறவியாக மாறினார். பற்று இருக்கும் வரை இந்த பூமியில் இருந்து விடுபட வழியே இல்லை.

★ஜீவ சமாதி அடைந்த மகான்கள் வாழ்க்கையை பார்த்தால் பற்று இல்லாமல் வாழ்ந்திருப்பார்கள். அப்படி வாழ்ந்து சொன்ன நேரத்தில், சொன்ன நாளில், ஊர் மக்களை வர சொல்லி ஜீவ சமாதி ஆக போகிறேன் என்று அறிவித்து உடம்பில் இருந்து உயிரை பிரித்து இறைநிலையில் ஐக்கியம் ஆவதே ஜீவ சமாதி ஆகும். ஜீவ சமாதி வாய்த்துவிட்டால் உடல் அழியாது. உடம்பு அப்படியே கல் சிலை போல மாறிவிடும்.

★ ஜீவ சமாதி என்பது உடம்பு,ஆன்மா இரண்டும் முக்தி அடைவதே ஆகும். இதுவே மரணமில்லா பெருவாழ்வு, பிறவி பெருங்கடலை கடப்பது, கடைத்தேற்றம் ஆவதாகும். மரணமில்லா பெருவாழ்வு என்பது 4000, 5000 வருடங்கள் கூட பூமியில் உயிர் வாழ்ந்து கடைசியில் ஜீவ சமாதி ஆக போகிறேன் என்று அறிவித்து உடம்பில் இருந்து உயிரை தனியாக பிரிப்பதாகும். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கூட உயிர் வாழலாம்.

★அது அவரவர் விருப்பம். ஆனால் கடைசில் மரணத்தை நாம் தீர்மானிப்பதே மரணமில்லா பெருவாழ்வு ஆகும். பூமியில் இருக்கும் வரை முழுமையான வெற்றியை அடைய முடியாது. உண்மையான மகான்கள் பூமியை விட்டு போக தான் விரும்புவார்கள்.

★பூமியில் வாழ வேண்டும் என்ற பற்று இருக்கும் வரை இன்பமோ, துன்பமோ இயற்கையாக நிகழ்ந்து கொண்டே இருக்கும். விதியை வெல்வதே நிறைவான நிலை.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: கடைசியில் மனித வாழ்க்கை இது தானா!!!!

Post by marmayogi » Sun Jun 21, 2015 5:43 am

Image
சமாதி என்றால் சமம் + ஆதி சமாதி
ஆதி யுடன் சமம் ஆவது சமாதி
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: கடைசியில் மனித வாழ்க்கை இது தானா!!!!

Post by marmayogi » Sun Jul 12, 2015 2:24 pm

ஜீவ சமாதி
ஜீவன் ஆதி பகவனுடன் இருந்து தூலம் எடுத்தது. தூலத்தில் இருக்கும் போதே ஆதியை தரிசனம் செய்தால் , இறுதியில் இருதயத்துள் ஜீவன்
ஆதிக்கு சமமாக அடங்கி விடும் .அதுவே ஜீவ சமாதி .
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: கடைசியில் மனித வாழ்க்கை இது தானா!!!!

Post by marmayogi » Fri Oct 02, 2015 3:33 pm

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.

;- நாலடியார்

கூட்டமாகக் கூடி உறவினர் கூவி அழ, பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் நிச்சயமாய் 'இன்பம் உண்டு, இன்பம் உண்டு' என்று மயங்குபவனுக்கு, 'டொண் டொண் டொண்' என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை) என்னும் உண்மையை உரைக்கும்!
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: கடைசியில் மனித வாழ்க்கை இது தானா!!!!

Post by marmayogi » Sun Oct 04, 2015 9:58 pm

சக்தியை அடக்கி ஆள்வது சமாதி . சமாதி என்பது மேல்மூச்சியும் கீழ் மூச்சியும் இணையும்போது ஏற்படும் நிலை மேல் மூச்சு மேலே ஒழுங்காக்கி விட்டாலும் , அங்கே நின்றுவிட்டாலும் ஏகாந்த நிலை உண்டாகும் .பிரியா நிலை என்பது இதுவே .ஏகத்தை உணர்ந்தவர் அறிவர் .அவர்கள் பேசும்போதும் , நடக்கும்போதும் .மற்ற செயல்களில் இருக்கும்போதும் ஆண்டவனிடத்தில் ஒன்றி இருப்பார்கள் .
ஆதி நிலை என்று முன்னரே பார்த்தோம் . சமம் + ஆதி = சமாதி என்று .
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”