கொடுமையிலும் கொடுமை பசி கொடுமை!!!

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

கொடுமையிலும் கொடுமை பசி கொடுமை!!!

Post by marmayogi » Thu May 07, 2015 9:41 am

Image
★கொடுமையிலும் கொடுமை பசி கொடுமை. பசி கொடுமையை அவரவர் அனுபவித்திருந்தால் அந்த வேதனை எவ்வளவு கொடுமையானது என்று உணர முடியும். பசிக்கு உணவே கிடைக்கவில்லை என்று யாராவது இருக்கிறீர்களா?.

★யாராவது பசியால் வாடினால் வடலூர் சத்திய தர்மசாலை செல்லுங்கள். வள்ளலாரின் அணையா அடுப்பு அங்கு உள்ளது. அந்த அடுப்பு இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது. உணவு அங்கு கிடைக்கிறது. பசி துன்பத்தை யாரும் அனுபவிக்க தேவையில்லை. 24 மணி நேரமும் உணவு அங்கு கிடைக்கும். வள்ளலார் உருவாக்கிய இந்த தருமச்சாலையில் 143 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து மக்களின் பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது.

★வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் இராமலிங்க அடிகளார். தண்ணீர் இன்றி வாடியிருக்கும் பயிர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய மனம் வாடுகிறது. பசியினால் இளைத்தவர்கள், ஒவ்வொரு வீடாகக் கெஞ்சிக்கேட்டும் பசி தீராமல் களைத்துப்போன ஏழைகளைப் பார்த்து என் உள்ளம் பதைபதைக்கிறது. நீங்காத நோயினால் அவதிப்படுகிறவர்களை நேருக்கு நேர் பார்க்கும்போது என் நெஞ்சம் துடிக்கிறது.

★இவர்களெல்லாம்கூடப் பரவாயில்லை. பசியால் வயிறு காய்ந்தாலும் இணையில்லாத மானம்தான் பெரியது என்று நினைக்கிறவர்கள், அதனால் யாரிடமும் பிச்சை கேட்காமல் சுயமரியாதையோடு பட்டினி கிடக்கிறவர்கள், அவர்களைப் பார்க்கும்போது, நானும் இளைத்துப்போகிறேன் என்கிறார்.

★தியானம் ஏதோ மன அமைதிக்கு செய்கிறார்கள் என நினைக்க வேண்டாம்.பசியை நேருக்கு நேர் சந்தித்து வெல்பவர் மகான்கள். பசி, நோய், முதுமை, மரணம் இதை வெல்வதே யோகம். யோகம் என்பது சாவை வெல்லும் ஒரு கலை.

★பசியை வெல்ல தியான யுக்திகள் உள்ளது. அதை கற்று கொள்வதற்கு முன்னால் பசி ஏற்படும் போது உணவு உண்டு அந்த துன்பத்தில் இருந்து விடுபட வேண்டும். பசி எற்படும் போது மனிதன் மிருகமாக மாறுகிறான். பசி ஏற்படும் போது என்னென்ன துன்பம் ஏற்படும் என்று வள்ளலார் பாடல்களில் எழுதிவைத்துள்ளார்.

★அந்த பாடலை பதிவிட நேரம் ஆகிவிடும். எனக்கு பசிக்கிறது. நான் உணவு உண்ண செல்கிறேன். நன்றி

வாழ்க வளமுடன்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”