அழியாத சூக்கும தேகம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

அழியாத சூக்கும தேகம்

Post by marmayogi » Mon May 04, 2015 5:21 am

அழியாத சூக்கும தேகம்
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Image
Image
★மனிதன் மட்டுமே இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று நாம் நினைக்கலாம் . சூக்கும தேகமாக பல கோடி உயிர்கள் இந்த பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதை இந்த புற கண் மூலமாக காண முடியாது. சூக்கும தேகத்தை அக கண் மூலமாக பார்கலாம். ஒவ்வொரு மனிதனும் மரணம் அடைந்து அவனது தேகத்தை அழிக்கிறான். மனித தேகம் கிடைப்பது அபூர்வம். அபூர்வம் என்று இப்போது உணர முடியாது. இறந்த பிறகு சூக்கும தேகத்தில் வாழும் போது அந்த வலி தெரியும்.
Image

Image
★சூக்கும தேகத்தையே இந்த அக கண்ணால் பார்க்க முடியவில்லையே !!!. இன்னும் காரண தேகத்தை எப்போது பார்க்க போகிறோம்!!. மகான்கள் காரண தேகத்தில் வாழ்வார்கள். காரண தேகம் என்பது இறைதுகளால் ஆனது. அந்த நிலைக்கு நாம் செல்ல வேண்டும் என்றால் நமது உடம்பு பரு உடலை கடந்து சென்றால் சூக்கும தேகமாக மாற வேண்டும். சூக்கும தேகம் வெளிபட்டால் அக கண்ணுக்கு புலபடாத பல செயல்களை நிகழ்த்த முடியும். இந்த பூமியில் சூக்குமகமாக வாழும் ஆன்மாவின் தொடர்பு ஏற்படும். பரு உடலை கடந்து பிரபஞ்சத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். சூக்கும தேகத்தை வெளி கொண்டுவர அஜபா நிலையில் ஐந்து புலன்கள் மூலமாக உணர்ந்த செயல்களை நினைவுக்கு கொண்டுவர வேண்டும்.
Image
★அஜபா நிலை என்பது இறந்தகாலத்தில் ஒரு செயலை செய்திருப்போம் அதை நினைவுக்கு கொண்டு வந்து பழக்க வேண்டும். உதாரணமாக ஒரு மாதத்திற்கு முன்பு நெருங்கிய நண்பரை பார்த்து பேசிருப்போம். அந்த நிகழ்வை கற்பனையாக நினைத்து பார்பதே அஜபா நிலை.. ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு சுவையான உணவை ருசித்து இருப்போம் அந்த சுவையை திரும்ப நினைவுக்கு கொண்டு வர வேண்டும். காதில் எதாவது பாடல்கள்,இசை , முன்பு எப்போதாவது கேட்டு இருப்போம். அந்த பாடல்கள் சூக்குமகமாக ஒலித்து கொண்டே இருக்கும். காதில் கேட்ட ஒலியை திரும்ப நினைவுக்கு கொண்டு வருவது அஜபா நிலையாகும்.

Image
★இவ்வாறு ஐந்து புலன்கள் மூலமாக உணர்ந்த செயல்களை திரும்ப நினைவுக்கு கொண்டு வந்து பழக்கிவிட்டால் சூக்கும தேகம் வெளிபடும். இதற்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஓய்வு நேரத்தில் விளையாட்டாக ஒவ்வொரு செயலையும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தாலே போதும்.
Image

★சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்
கண்ணால் பார்த்ததை, காதால் கேட்டதை, வாயால் பேசியதை, மூக்கு மூலமாக வாசனையை உணர்ந்ததை, நாக்கு மூலமாக ருசியை உணர்ந்ததை திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதே அஜபா நிலையாகும். அஜபா நிலையில் ஒவ்வொரு செயலையும் திரும்ப நினைவுக்கு கொண்டுவரும் போது நம்முடைய தேகமானது பரு உடலை கடந்து சூக்கும தேகமாக மாறும். மேலும் கண்ணாடி பயிற்சி, தீப பயிற்சி செய்வதன் மூலமாகவும் சூக்கும தேகத்தை வெளிகொண்டுவர முடியும்.

நன்றி. வாழ்க வளமுடன்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”